தனது நிறமும் இல்லை... தந்தையின் சாயலும் இல்லை... பிறந்து 8 நாட்களே ஆன குழந்தையை கொன்ற தாய் கைது
கேரள மாநிலத்தில் தனது நிறம் இல்லை என்பதாலும், தந்தையின் சாயல் இல்லை என்பதாலும் குழந்தையை கொன்ற தாயை போலீஸார் கைது செய்தனர்.
கோட்டயம்: கேரள மாநிலத்தில் பிறந்து 8 நாள்களே ஆன குழந்தைக்கு தனது நிறமும், தந்தையின் சாயலும் இல்லாததால் அதன் கழுத்தை நெரித்து கொன்ற தாயை போலீஸார் கைது செய்தனர்.
கோட்டயம் முறிகாட்டுக்குடி அருகே உள்ள கட்டபனாவில் வசித்து வருபவர் கண்டதின்கார பினு. இவரது மனைவி சந்தியா (28).
இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. 9 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

குழந்தை பிறந்தது
இந்நிலையில் சந்தியா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். அவருக்கு கடந்த 8 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.

தந்தையின் சாயல் இல்லை
பிறந்த குழந்தை தனது நிறம் இல்லை என்பதாலும், கணவரின் சாயல் இல்லாததாலும் சந்தியா கவலையில் உள்ளதாக தெரிகிறது. இதனால் பெற்ற குழந்தை என்றும் பாராமல் குழந்தையை கழுத்தை துணியை கொண்டு நெரித்து கொன்றுவிட்டார்.

கணவரிடம் அழுகை
பின்னர் கணவர் பினு வீட்டுக்கு வந்தவுடன் குழந்தை எந்தவித அசைவும் இல்லாமல் உள்ளது என்று கூறி அழுது புலம்பியுள்ளார். இதையடுத்து இருவரும் குழந்தையை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றனர்.

போலீஸ் விசாரணை
அப்போது குழந்தையை சோதனை செய்த மருத்துவர், அதன் கழுத்தில் காயங்கள் இருந்ததை கண்டார். பின்னர் உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளித்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சந்தியா மீது சந்தேகம் அடைந்து அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். இதில் குழந்தையை கொன்றதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications