For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா.. இந்தியாவிலேயே சிறந்த ஆட்சியை தருவது கேரளாதானாம்!

பொது விவகார மையம் என்ற அமைப்பு நடத்திய ஆய்வின் படி இந்தியாவில் கேரள மாநிலம்தான் மிகவும் சிறந்த ஆட்சியை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பெங்களூர்: பொது விவகார மையம் என்ற அமைப்பு நடத்திய ஆய்வின் படி இந்தியாவில் கேரள மாநிலம்தான் மிகவும் சிறந்த ஆட்சியை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.

கடந்த 3 வருடமாக, அந்த அமைப்பு, இப்படி சிறந்த ஆட்சி தரும் மாநிலங்களை பட்டியலிட்டு வருகிறது. இந்த அமைப்பு எப்போதும், துல்லியமான புள்ளி விவரங்களை வைத்து மாநிலங்களை மதிப்பிடும்.

அதன்படியே தற்போது மதிப்பிட்டு மாநிலங்களை வகைப்படுத்தி இருக்கிறது. இதில் கேரளா மாநிலம் தற்போது முதலிடம் பிடித்து இருக்கிறது.

யார் இவர்கள்

யார் இவர்கள்

பொது விவகார மையம் எனப்படும் பப்ளிக் அஃபயர்ஸ் செண்டர் இந்தியா என்ற அமைப்புதான் இந்த பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இந்த அமைப்பு கடந்த 1994ம் ஆண்டு நிறுவப்பட்டது. சிறப்பான ஆட்சி வழங்குவதற்கும், ஆட்சியின் திட்டங்களை மக்களை சென்று சேர்வதற்கும் இந்த நிறுவனம் ஆலோசனை வழங்கி வருகிறது. கர்நாடகாவை தலைமையிடமாக கொண்டு இந்த அமைப்பு செயல்படுகிறது.

எப்படி

எப்படி

அரசு மக்களுடன் எப்படி தொடர்பில் இருக்கிறது. அரசின் திட்டங்கள் மக்களிடம் எப்படி சென்று சேர்கிறது. மக்களை அரசு எப்படி நடத்துகிறது. அவசர காலங்களில் எப்படி அரசு செயல்படுகிறது. வளங்களை எப்படி பயன்படுத்துகிறது என்று இந்த அமைப்பு கண்காணிக்கும். பின் அதன்படி, முடிவுகளை வெளியிடும்.

முதல் இடத்தில் எந்த மாநிலம்

முதல் இடத்தில் எந்த மாநிலம்

இந்த சோதனையின் அடிப்படையில் கேரளா இந்தியா அளவில் முதலிடம் பிடித்து இருக்கிறது. கேரளாவின் பின்ராயி தலைமையிலான அரசு, இந்தியாவிலேயே நல்ல ஆட்சி தருவதாக இந்த அமைப்பு கூறியுள்ளது. கேரளா மூன்றாவது முறையாக இந்த சிறப்பை பெற்றுள்ளது.

காரணம் என்ன

காரணம் என்ன

இதற்கு என்ன காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி, கேரளா சிகா வைரஸ் பிரச்சனையின் போது சிறப்பாக செயல்பட்டதாகவும், கேரள அரசின் திட்டம் மக்கள் மத்தியில் நன்றாக சென்று சேர்ந்து இருப்பதாக கூறியுள்ளது. இதன் காரணமாக கேரளா முதலிடம் பிடித்து இருக்கிறது.

English summary
Kerala named as the best governing state in India by Public Affairs Centre India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X