எந்த ஆண் அதிக சுகம் கொடுத்தார்..? கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணிடம் கேரள போலீஸ் அநாகரீக கேள்வி
திருவனந்தபுரம்:கேரளாவில் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணை முறை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஆண் உங்களுக்கு அதிக சுகம் கொடுத்தார் என்று போலீசார் கேட்ட கேள்வியால் அப்பெண்ணும், கணவரும் கதறியுள்ளனர்.
கேரளாவின் திருச்சூரை சேர்ந்தவர் 35 வயதாகும் நீத்து (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சில மாதங்கள் முன்பு கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் வந்த அவருடைய நண்பர்கள் நால்வர் காரில் நீத்துவை கூட்டிச் சென்று ஊருக்கு வெளியே வைத்து மாற்றி மாற்றி பலாத்காரம் செய்துள்ளனர்.

3 மாதங்கள் பிறகே இதுகுறித்து கணவரிடம் தெரிவித்தார் நீத்து. இதையடுத்து தனது நண்பர்களுக்கு எதிராக நீத்துவின் கணவர் போலீசில் புகார் அளித்தார். விசாரணைக்கு வரவழைத்த போலீசார், அந்த பெண்ணிடம் கேவலமான கேள்விகளை எழுப்பி அவமானப்படுத்தியுள்ளனர்.
உங்களை, நான்கு பேர் பலாத்காரம் செய்ததாக கூறுகிறீர்கள் அல்லவா, அதில் எந்த நபர் உங்களை பலாத்காரம் செய்தபோது, உங்களுக்கு அதிகமான சுகம் கிடைத்தது என்று ஒரு கேள்வியை போலீஸ்காரர் ஒருவர் முன் வைத்தபோது, நீத்து நொடிந்து அழுதுவிட்டாராம். கணவரும் தேம்பி தேம்பி அழுதுள்ளார். இவ்விவகாரத்தை மலையாள திரை பிரபலம் பாக்யலட்சுமி தனது பேஸ்புக் தளத்தில் வெளியிட்டு வெளிஉலகிற்கு கொண்டு வந்துள்ளார்.
பாக்யலட்சுமி வெளியிட்ட தகவலானது பலரால் பகிரப்பட்டு உள்ளது. மாநில முதல்வர் அலுவலகமே இதில் தலையிடும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. நீத்து மற்றும் அவருடைய கணவர் முகத்தை மூடிக்கொண்டு நிருபர்களிடம் கூறுகையில், "போலீஸ் வழக்கு எனக்கு வேண்டாம், நாங்கள் போலீசால் அவமானப்படுத்தப்பட்டோம். பாலியல் பலாத்காரத்தை விட, போலீசாரின் கேள்விகள் அதிக அவமானம் தருகிறது" என அவர் கூறியுள்ளார்.
"உனது கணவருக்கு உடல்நிலை சரியில்லை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்று நீத்துவை பெண்ணை ஏமாற்றி காரில் அழைத்து சென்று உள்ளனர். அவரும் நம்பி சென்றுள்ளார். திருச்சூர் நகரின் வெளியே காரை நிறுத்தி வைத்து, கணவரின் நண்பர்கள் பலாத்காரம் செய்துள்ளனர். பலாத்கார குற்றவாளிகளில் ஒருவர், அரசியல் கட்சி ஒன்றில் பொறுப்பில் உள்ளார். இதுதான் போலீசாரின் பின்வாங்கலுக்கு காரணம் என கூறப்படுகிறது.
-
ரூ.5.07 லட்சம் கோடி கடனில் கேரளா அரசு.. வெள்ளை அறிக்கையில் ‘திடுக்'.. தமிழகத்தை விட குறைவு தான் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications