கோட்டை விட்ட தமிழக போலீசார்.. முந்தி கொண்ட கேரள போலீசார்!

By: KMK ESAKKIRAJAN
Subscribe to Oneindia Tamil
  விழுப்புரத்தில் கள்ள சாராய பாக்கெட்டுகள் விற்பனை- வீடியோ

  கன்னியாகுமரி: போதை பொருள் கும்பலை தமிழக போலீசார் பிடிக்கும் முன்பே கேரளா போலீசார் மடக்கி பிடித்ததால் தமிழக போலீசார் திகைப்பில் உள்ளனர்.

  போதை பொருள் கும்பலை தமிழக போலீசார் பிடிக்கும் முன்பே கேரளா போலீசார் மடக்கி பிடித்ததால் தமிழக போலீசார் திகைப்பில் உள்ளனர்.

  kerala police caught the drugs smuggling group in tamilnadu

  கேரளாவுக்கு போதை பொருட்களை குமரி மாவட்டம் வழியாக திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியை சேர்ந்த ஒருவர் கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து கேரள போலீசார் பழனி பகுதிக்கு சென்று சம்பந்தப்பட்ட வாலிபரை பிடித்து வந்தனர்.

  அந்த வாலிபரை விசாரணை செய்த போது குமரியை சேர்ந்த ஒரு கும்பலிடம் போதை பொருளை வாங்கி வந்து கேரளாவில் விற்பனை செய்ததாக கூறினார். இதையடுத்து கேரளாவை சேர்ந்த போதை தடுப்பு பிரிவு போலீசார் இரவு அந்த வாலிபருடன் மார்த்தாண்டத்துக்கு விரைந்தனர். அங்கு ஒரு லாட்ஜில் தங்கி கொண்டு போதை பொருள் கும்பலுக்கு போன் செய்து உடனே வரும்படி பேச சொல்லி வாலிபரிடம் போனை கொடுத்துள்ளனர்.

  வாலிபர் சொன்னப்படி ஒரு கிலோ அபினுடன் சொகுசு காரில் போதை கும்பல் வந்துள்ளது. அப்போது தயார் நிலையில் இருந்த போலீசார் கும்பலை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து சொகுசு கார் மற்றும் 5 பேரையும் கேரளாவுக்கு அழைத்து சென்றனர். ஆனால் நடந்த சம்பவம் குமரி மாவட்ட போலீசாருக்கு தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குமரி மாவட்ட காவல் துறையில் பரபரப்பாக பேசப்படுகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Kerala Police caught the drugs smuggling group in Dindugul and Kanniyakumari.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற