For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறையில் மரணம் அடைந்த கைதி.. 2 போலீஸுக்கு தூக்கு தண்டனை.. திருவனந்தபுரம் சிபிஐ கோர்ட் அதிரடி

கேரளாவில் சிறையில் மரணம் அடைந்த சிவக்குமார் என்பவரின் மரண வழக்கில் 2 போலீசாருக்கு தூக்கு தண்டனை வழங்கி திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் சிறையில் மரணம் அடைந்த சிவக்குமார் என்பவரின் மரண வழக்கில் 2 போலீசாருக்கு தூக்கு தண்டனை வழங்கி திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.இந்தியாவில் சிறை மரணம் இப்போது அதிகமாகிவிட்டது. சந்தேகத்தின் பேரில் அழைத்து செல்லப்பட்டு குற்றவாளிகள், முன்னாள் குற்றவாளிகள், நிரபராதிகள் சிலர் போலீசால் அடித்து கொலை செய்யப்படும் அவலம் நடக்கிறது. அப்படி ஒரு வழக்கில் இன்று சிறப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2005 செப்டம்பர் 25ம் தேதி சிவக்குமார் என்ற நபர் 2000 ரூபாய் திருட்டு வழக்கு ஒன்றில் விசாரணைக்காக திருவனந்தபுரம் போர்ட் காவல்நிலையத்திற்கு போலீசால் அழைத்து செல்லப்பட்டார். வெறுமனே விசாரணைக்கு என்று அவரை அழைத்து சென்று இருக்கிறார்கள்.

சில வழக்கு

சில வழக்கு

சிவக்குமார் மீது ஏற்கனவே சில வழக்கு இருப்பதால் சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்து இருக்கிறார்கள். இந்த நிலையில், அன்று இரவு போலீஸ் அவரை அடித்ததில் அவர் பலியாகி உள்ளார். அப்போது அவருக்கு வெறும் 26 வயது மட்டும் ஆகியுள்ளது. வெறும் 2000 ரூபாய்க்காக அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

சிபிஐ வழக்கு

சிபிஐ வழக்கு

இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக வழக்கு தொடுக்கப்பட்டது. சிபிஐ விசாரித்த இந்த வழக்கின் விசாரணை திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அவரது உடல் பிரதே பரிசோதனை மூலம் அவர் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இத்தனை வருடம் நடந்த இந்த வழக்கில் இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

என்ன தண்டனை

என்ன தண்டனை

அதன்படி கான்ஸ்டபிள் கே ஜித்தகுமார், எஸ்வி ஸ்ரீகுமார் ஆகியோருக்கு இந்த வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது. முன்னாள் துணை கமிஷனர் டிகே ஹரிதாஸ், இன்ஸ்பெக்டர் இகே சாபு, சப்-இன்ஸ்பெக்டர் அஜித் குமார் ஆகியோருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தாய் போராட்டம்

தாய் போராட்டம்

ஆதாரங்களை அழிக்க முயன்றதால் அவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் இந்தியாவில் முதல்முறை இப்படி ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது, 13 வருடம் இதற்காக சிவக்குமாரின் 68 வயது நிரம்பிய தாய் பிரபாவதி போராடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kerala Police Custodial Death Case:2 policemen given death by CBI court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X