Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரளாவில் அதிகரிக்கும் "பேய் வீடுகள்.." வாங்க ஆளில்லாமல் கிடக்கும் நிலங்கள்.. அள்ளிப்போட சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

கொச்சி: கேரளா ஒரு நூதன பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது. கடவுளின் தேசம் என்று தங்களுக்கு தாங்களே பெயர் சூட்டி மற்றவர்களின் மத்தியில், பெருமை காட்டிக் கொண்ட, கேரள மக்களின் வீடுகள் இப்போது பேய் வீடுகளாக (Ghost House) காட்சியளிக்கின்றன. அவர்களின் நிலங்களை வாங்குவதற்கும் ஆளில்லை. அடிமாட்டு விலைக்கு கூவி கூவி பார்த்தாலும் கொள்வார் இல்லை.

உதாரணத்திற்கு ஜார்ஜ்குட்டி கதையை பார்ப்போம். 2000களின் தொடக்கத்தில் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். இப்போது அவர் மற்ற வெளிநாடுவாழ் மலையாளிகளைப் போலவே ஒரு பிரச்சினையை சந்திக்கிறார்.

kerala real estate

அது வேறு ஒன்றுமில்லை, கேரளாவில் உள்ள தங்கள் சொத்துக்களை விற்பதில் ஏற்படும் கஷ்டம்தான் அது. ஜார்ஜ்குட்டிக்கு கேரளாவின் போன்குன்னம் பகுதியில் அரை ஏக்கர் நிலம் உள்ளது. அவரது பிள்ளைகள் அமெரிக்காவில் நல்ல வேலைகளில் உள்ளனர். கேரளாவில் உள்ள நிலத்தை பற்றி அவர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை. இதனால் நிலத்தை விற்கலாம் என்று ஆட்களை தேடினால் வாங்க யாரும் முன்வரவில்லை.

மலையாளிகள் நாடுவிட்டு நாடு சென்று வாழ்வதில் பலே நபர்கள். 2000களின் தொடக்கத்தில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர்ந்த பல மலையாளிகள் அங்கேயே நன்றாக செட்டில் ஆகிவிட்டதால், கேரளாவில் உள்ள தங்கள் நிலங்களை விற்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அடிமாட்டு விலைக்கு கேட்கிறார்கள். சமீப காலமாக வெளிநாடு போன மலையாளிகள் இன்னும் விற்பனைக்கு தேடவில்லை. ஆனால் வருங்காலத்தில் அவர்களுக்கும் இதுதான் நிலைமையாக இருக்கப்போகிறது.

ரப்பர் விலைகள் வீழ்ச்சியடைந்ததால், நில விலைகளும் கடுமையாக குறைந்துள்ளன என்பதுதான் இதற்கான அடிப்படை காரணம். இதன் காரணமாக, வெளிநாட்டில் குடியேறிய மலையாளிகள் தங்கள் நிலங்களை விவசாயிகளுக்கு குத்தகைக்கு விடுகின்றனர்.

நிலம் விலை வீழ்ச்சி

2010-11ல் ரப்பர் விலை உச்சத்தில் இருந்தபோது, ஒரு ஏக்கர் ரப்பர் தோட்டத்தின் விலை ரூ. 1 கோடியாக இருந்தது. தற்போது அது ரூ. 40-45 லட்சமாக குறைந்துள்ளது. கிராமப்புற பாதை உள்ள நிலங்களின் விலை ரூ. 50-60 லட்சத்தில் இருந்து ரூ. 25-30 லட்சமாக குறைந்துள்ளது.இந்த விலையில் கூட வாங்குபவர்கள் கிடைப்பது கடினம்.

குத்தகை விவசாயம்

கேரளாவின் மத்திய பகுதிகளான கோட்டயம், இடுக்கி, பத்தனம்திட்டா மற்றும் எர்ணாகுளம் பகுதிகளில் இந்த நிலைமை அதிகம் காணப்படுகிறது. எர்ணாகுளம் மாவட்டத்தின் கூத்தட்டுகுளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி எம்.சி. சாஜு "வரும் ஆண்டுகளில் விற்கப்படாத நிலங்கள் குத்தகை விவசாயத்திற்கு மிக அதிக அளவில் வரும்" என்கிறார் உறுதியாக. கோத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த சோனி டி.கே. என்பவர் 500 ஏக்கர் நிலத்தில் அன்னாசி பயிரிடுகிறார். அவர் கஞ்சிரப்பள்ளியில் உள்ள ஒரு ரப்பர் தோட்டத்தையும் குத்தகைக்கு எடுத்துள்ளார். குத்தகைக்கு ஈஸியாக நிலம் கிடைப்பதால் இது சாத்தியமாகியுள்ளது.

எதிர்காலம்

திருவனந்தபுரத்தில் உள்ள International Institute of Migration and Development இயக்குநர் கே.வி. ஜோசப், "மேற்கு நாடுகளில் குடியேறிய கேரளக்காரர்கள் தங்கள் சொத்துக்களை அடிமாட்டு விலையில் விற்கும் நிலை ஏற்படும். கேரளாவின் சமூக-பொருளாதார சூழ்நிலையில் பெரிய மாற்றம் ஏற்படும்" என்கிறார். மத்திய கேரளாவில் ஏற்கனவே பல "பேய் வீடுகள்" (காலியாக உள்ள கைவிடப்பட்ட வீடுகள்) உள்ளன, அவை விரைவில் விற்பனைக்கு வரும் என்றும் அவர் கூறுகிறார். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், இது தொடர்பான கட்டுரையை வெளியிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+