சாவிக்கு வெய்ட் பண்ண முடியாது.. மருத்துவமனை சுவற்றை தாண்டி குதித்த புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி!
புதுச்சேரி ஆளுநராக நியமிக்கப்பட்டதில் இருந்து கிரண்பேடியின் அதிரடிகள் தொடருகின்றன. புதுச்சேரியில் இரவு நேரத்தில் சைக்கிளில் பயணித்து, பாதுகாப்பு எப்படி உள்ளது என்பதை கண்காணித்து பரபரப்பை ஏற்படுத்தியிர
புதுச்சேரி: மருத்துவமனை சுவற்றை தாண்டி குதித்து மருத்துவமனைக்குள் சென்று ஆய்வு நடத்தியுள்ளார் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி.
காரைக்காலில் ஒரு வாரம் முகாமிட்டுள்ளார் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி. அங்கிருந்தபடி நாள்தோறும் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்தும், அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுட்டும் வருகிறார்.
முகாமின் 4ஆம் நாளான நேற்று ஆட்சியரகத்தில் அரசு பொதுமருத்துவமனை மேம்பாடு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மருத்துவமனை விசிட்
முன்னதாக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு நேரடி விசிட் செய்ய கிரண்பேடி சென்றார். டெங்கு காய்ச்சல் பரவும் நிலையில், அரசு மருத்துவமனை வளாகம் தூய்மையாக உள்ளதா என்பதை சோதித்து பார்க்கவே கிரண்பேடி சென்றார்.

சாவியை மறந்த ஊழியர்க்ள்
அவருடன், காரைக்கால் மாவட்ட கலெக்டர் கேசவன், போலீஸ் எஸ்.பி சந்திரன் மற்றும் உயர் அதிகாரிகளும் சென்றிருந்தனர். மருத்துவமனை வளாகத்திற்குள் உள்ள அவர் லேடி ஆப் லவுடர்ஸ் சிலை அருகே செல்ல கிரண்பேடி விரும்பினார். சிலையை சுற்றி செங்கல் சுவர் எழுப்பப்பட்டு, கேட் போட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவமனை ஊழியர்களோ, அந்த கேட் சாவியை மறந்துவிட்டனர்.

சுவற்றை தாண்டிய கிரண்பேடி
ஊழியர்கள் சாவியை தேடுவதில் தாமதம் செய்துவிடவே பொறுமை இழந்த, கிரண் பேடி, மூன்றடை அடி உயர சுவற்றை திடீரென தாண்டி குதித்து உள்ளே நடந்து செல்ல ஆரம்பித்துவிட்டார். இதை பார்த்து அதிகாரிகள் திகைத்தனர். ஆனால் ஆளுநர் செல்லும்போது உடனிருக்க வேண்டும் என்பதால் கலெக்டரும், எஸ்.பியும் பிற போலீசாரும் சுவற்றை தாண்டி செல்ல வேண்டியதாயிற்று.

அதிரடி ஆளுநர்
68 வயதாகும் கிரண்பேடிதான், இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாகும். திகார் சிறையில் பல சீர்திருத்தங்களை கொண்டுவந்தவர். பாஜகவை சேர்ந்த இவர் புதுச்சேரி ஆளுநராக நியமிக்கப்பட்டதில் இருந்து அதிரடிகள் தொடருகின்றன. சமீபத்தில் புதுச்சேரியில் இரவு நேரத்தில் சைக்கிளில் பயணித்து, இரவு நேர பாதுகாப்பு எப்படி உள்ளது என்பதை கண்காணித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் கிரண் பேடி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications