"பணத்தை அள்ளி கொடுத்த போலீஸ்.." கொல்கத்தா மருத்துவர் கொலை.. பெற்றோர் அதிர வைக்கும் தகவல்! பகீர்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 31 வயதான பயிற்சி மருத்துவர் ஒருவர் கொடூரமாகப் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த வழக்கைக் கொல்கத்தா போலீசார் மிக மோசமாகக் கையாண்டதாகப் பலரும் விமர்சித்து வரும் நிலையில், போலீசார் தங்களுக்கு லஞ்சம் தர முயன்றதாகப் பரபர குற்றச்சாட்டுகளை மருத்துவரின் பெற்றோர் முன்வைத்துள்ளனர்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் கடந்த ஆக. மாதம் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவர் பணிபுரிந்து வந்த மருத்துவமனையிலேயே இந்த பகீர் சம்பவம் நடந்தது.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து மேற்கு வங்கம் முழுக்க தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடந்து வருகிறது. குறிப்பாகக் கொல்கத்தா போலீசாருக்கு முதுகெலும்பைப் பரிசாகத் தந்தும் போராட்டம் நடந்து வருகிறது.
போராட்டங்கள்: இதற்கிடையே பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொல்கத்தா மருத்துவரின் பெற்றோர் சில பகீர் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். கொல்கத்தா போலீசார் இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்யவே முதலில் முயன்றதாகக் கூறியுள்ளனர். கொல்கத்தா மருத்துவர் கொலையைக் கண்டித்து அங்குத் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், அப்படி நடந்த போராட்டம் ஒன்றில் அந்த மருத்துவரின் பெற்றோர் கலந்து கொண்டனர். இந்த வழக்கைக் கொல்கத்தா போலீசார் முழுமையாக விசாரிக்காமல் முடிக்கவே முயன்றதாகக் குற்றஞ்சாட்டினர்.
லஞ்சம் தந்த போலீஸ்: இது குறித்து அந்த மருத்துவரின் தந்தை கூறுகையில், "கொல்கத்தா போலீசார் ஆரம்பத்திலிருந்தே வழக்கை மூடிமறைக்கவே முயன்றனர்.. உடலைப் பார்க்க எங்களை அவர்கள் அனுமதிக்கவே இல்லை. பல மணி நேரம் போலீஸ் நிலையத்தில் காத்திருக்க வைத்தனர். உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லும் முன்பு எங்களை அனுமதிக்காமல் காத்திருக்கச் சொன்னார்கள்.
உடலை எங்களிடம் ஒப்படைத்தபோது, ஒரு மூத்த போலீஸ் அதிகாரி எங்களுக்குப் பணம் கொடுக்க முயன்றார். ஆனால், நாங்கள் அதைத் திட்டவட்டமாக மறுத்துவிட்டோம். எங்கள் மகளின் கொலைக்காக நீதி கேட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதை ஆதரிக்கும் விதமாகவே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறோம்" என்றார்.
சிபிஐ விசாரணை: இந்த வழக்கைக் கொல்கத்தா போலீசார் மிக மோசமாகக் கையாண்டதாக அப்பகுதி மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தே வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து கொல்கத்தா ஐகோர்ட் வழக்கு சிபிஐ விசாரணையை மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் இதுவரை சஞ்சய் ராய் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். சஞ்சய் ராயால் எப்படி அரசு நடத்தும் மருத்துவமனையின் எல்லா இடங்களுக்கும் சுதந்திரமாகச் சென்று வர முடிந்தது என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சஞ்சய் மருத்துவமனையில் படுக்கைகளை ரெடி செய்து தருவது உள்ளிட்ட காரணங்களைச் சொல்லி மக்களிடம் பணம் வாங்கி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
பரபரப்பு: இந்தச் சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டை விதிக்கும் வகையிலான மசோதாவை அம்மாநில அரசும் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் இதுவரை சஞ்சய் ராய் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், இதில் மேலும் பலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றே போராட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications