செமினார் ரூமில் வாயை கிழித்து, தொண்டையை நொறுக்கி, கண்ணை குத்தி.. துடித்து பிரிந்த பெண் டாக்டர் உயிர்
கொல்கத்தா: கொல்கத்தா டாக்டர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.. இதற்கு நடுவில் மருத்துவர் கொலையில் ஆதாரம் அழிக்கப்பட்டதாக புகார்கள் வெடித்திருப்பது, கூடுதல் பரபரப்பை தந்து வருகிறது.
கொல்கத்தா ஆர்ஜிகர் மருத்துவ கல்லூரியில் முதுகலை பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்ற நபர் கைதாகி விசாரணையின் பிடியில் உள்ளார். கொலை வழக்கை கொல்கத்தா ஹைகோர்ட்டின் உத்தரவின்படி, சிபிஐ விசாரிக்க ஆரம்பித்துள்ளது.

பெண் டாக்டர்கள்: எனினும், பெண் டாக்டர் கொலையை கண்டித்து டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் நள்ளிரவிலும் நடந்த போராட்டத்தில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க தடியடி நடத்தினர்.
அந்த நேரத்தில்தான், ஒரு கும்பல் மருத்துவமனையின் ஐசியூ வார்டுக்குள் நுழைந்து, அங்கிருந்த கருவிகளை அடித்து நொறுக்கியிருக்கிறது. போலீசார் மீதும் தாக்குதல் நடத்தினர்.நிலைமை கைமீறி சென்றதால், கண்ணீர் புகை குண்டுகளை வீசி கும்பலை போலீசார் கலைத்தனர்.

தடயங்கள் : இந்த விவகாரத்தில் 15 போலீசாருக்கு காயம் ஏற்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 9 பேர் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட சூழலில், பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டு சடலம் இருந்த இடத்தில் தடயங்கள் அழிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் சுவ்ராங்கர் தத்தா, 1000க்கும் மேற்பட்டோர் கும்பல் ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரியை தாக்கி, ஆதாரங்களை சிதைத்து நீதியைத் தடுக்க முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டியிருப்பது மிகப்பெரிய பரபரப்பை தந்துவருகிறது.

செமினார் ரூம்: ஆனால், இதற்கு கொல்கத்தா காவல்துறை தரப்பில் விளக்கம் தரப்பிட்டுள்ளது. போலீசார் இதைப்பற்றி சொல்லும்போது, "செமினார் ரூமுக்குள் யாரும், எதையும் தொடவில்லை... உறுதி செய்யப்படாத செய்தியை யாரும் பரப்ப வேண்டாம். வதந்தியை பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்..
செமினார் ரூம் அருகே புனரமைப்பு பணிகள் நடைபெற்றபோது ஆதாரங்களை அழிக்க முயற்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மம்தா பானர்ஜி அரசு ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதாக, மேற்குவங்க பாஜக குற்றஞ்சாட்டியிருந்தது.. அதேபோல, இதையடுத்தே, அங்கு வன்முறை நடைபெற்றது. இப்போது காவல்துறையே ஆதாரங்களை அழித்திருப்பதாக இன்னொரு குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.
ரவுடிகள்: இதற்கு நடுவில், மம்தா பானர்ஜியால் அனுப்பப்பட்ட ரவுடிகள் தான் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
ஏற்கனவே, பலாத்கார சம்பவத்தில் பலரும் ஈடுபட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி, அது தொடர்பான உண்மைத்தன்மை கண்டறியப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், மாநில அரசு ஆதாரங்களை அழித்ததாக பாஜகவும், போலீசார்தான் ஆதாரங்களை அழித்ததாக எதிர்க்கட்சிகளும், ரவுடிகளை அனுப்பியதே மம்தாதான் என்றும் ஒவ்வொருவிதமான பரபரப்பு குற்றச்சாட்டுகள் கிளம்பியிருப்பதால், கொல்கத்தாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதற்கு நடுவில், குற்றவாளிக்கு மரண தண்டனை வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பிலிருந்தே கோரிக்கைகள் வலுவாகி வருகின்றன.. காரணம், நேற்றுமுன்தினம் வெளியாகியிருந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், மிகப்பெரிய அதிர்ச்சியை மக்களிடம் தந்து வருகிறது.
காயங்கள்: மருத்துவ மாணவி செமினார் ரூமில் அரை நிர்வாணமாக சடலமாக கிடந்துள்ளார். அவரது உடலில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே துணி இருந்துள்ளது. அவரது உடலில் பல இடங்களில் கடுமையான காயங்களும், அனைத்து பகுதியிலும் ரத்தம் படிந்திருந்தது. மாணவியின் உடலில் 150 மில்லிகிராம் விந்தணுக்கள் இருந்ததாக போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் கண்டறியப்பட்டுள்ளது.. இதன் மூலம், பலரால் பலமுறை அப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
வன்கொடுமை செய்வதற்கு முன்பாக, பெண்ணின் மூக்குக் கண்ணாடி உடைக்கப்பட்டு, கண்களின் குத்தப்பட்டுள்ளது.. இதனாலேயே கண்களில் இருந்து ரத்தம் கசிந்துள்ளது.. காதில் பலமாக அடித்ததால், காதுகளிலிருந்தும், தலையின் பின்புறம் தாக்கியதால் தலையிலிருந்தும் அதிக ரத்தம் கசிந்துள்ளது.
தைராய்டு கேலண்ட்: அந்த பெண்ணின் கால்கள் 90 டிகிரி செல்லும் அளவுக்கு உடைக்கப்பட்டிருக்கிறதாம்.. அந்த பெண் சத்தம் போடக்கூடாது என்பதற்காக அவரது வாய் கிழிக்கப்பட்டு, தொண்டை உடைக்கப்பட்டிருக்கிறது.. கழுத்திலுள்ள தைராய்டு கேலண்டும் உடைக்கப்பட்டிருக்கிறதாம்.. இதெல்லாம் வெறும் 2 மணி நேரம் இடைவெளிக்குள் நடந்துள்ளதாகவும், தலை மற்றும் கால் உடைக்கப்பட்டபோது அந்த பெண் இறந்ததாகவும் சொல்கிறார்கள். இவ்வளவு கொடூரமாக கொலையை செய்தவர்களுக்கு, கொடூரமான முறையிலேயே மரண தண்டனை வழங்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றன
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications