பாஜகவின் கோலி மாரோ.. துரோகிகளை சுட்டுக் கொல்லுங்க கோஷம்.. லாடம் கட்டுவதில் மமதாஜி மும்முரம்!
கொல்கத்தா: உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கொல்கத்தா பேரணியில் பங்கேற்றவர்கள் கோலி மாரோ- துரோகிகளை சுட்டுக் கொல்லுங்க என கோஷம் எழுப்பியிருந்தனர். தற்போது இந்த கோஷத்தை எழுப்பியவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது மேற்கு வங்க அரசு.
சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாக கொல்கத்தாவில் அமித்ஷா நேற்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள் கோலி மாரோ என கோஷம் எழுப்பினர். அதாவது துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள் என்பதுதான் இதன் அர்த்தம்.

பாஜகவினர் ஜெய்ஶ்ரீராம், பாரத் மாதா கீ ஜே கோஷங்களை இப்போது எழுப்புவதில்லை. அதற்கு பதிலாக வன்முறையை தூண்டும் வகையில் கோலி மாரோ என்றுதான் முழக்கம் எழுப்புகின்றனர். டெல்லி சட்டசபை தேர்தலின் போது மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இப்படி கோஷம் எழுப்பியதால் அவர் மீது வழக்கு பாயும் நிலை உள்ளது.
இந்நிலையில் கொல்கத்தாவில் அமித்ஷா பேரணியில் கோலி மாரோ கோஷம் எழுப்பப்பட்டது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி , கோலி மாரோ கோஷம் எழுப்பியவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கை தொடங்கியுள்ளது என்றார்.
மேலும் கோலி மாரோ கோஷம் எழுப்புவர்களை வீடியோ பதிவுகளில் பார்த்தால் போலீசாரிடம் தெரிவிக்கவும்; நீங்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது என்றும் மமதா பானர்ஜி அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் கோலி மாரோ கோஷம் எழுப்பிய சிலர் கொல்கத்தாவில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எஞ்சியவர்களையும் அடையாளம் கண்டு கைது செய்வதில் மேற்கு வங்க போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications