பயம்+ பதட்டத்தில் பாஜகவாக மாறியது காங்கிரஸ்.. டெல்லியில் யாகம் வளர்த்து வழிபாடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் அங்கு போட்டியிட்ட பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் உள்ளிட்ட கட்சிகள் பூஜை, யாகம், பிரார்த்தனை ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றன.

கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்தது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.

Kumarasamy offers prayers at Adichunchanagiri Math

முன்னதாக தேர்தலில் வெற்றி பெற வேண்டி பாஜக வேட்பாளர் ஸ்ரீராமுலு வீட்டிலேயே சிறப்பு பூஜையை நடத்தினார். அது போல் அவர் வாக்கு பதிவு அன்றும் கோ பூஜை நடத்தினார்.

கிங் மேக்கர் என அனைவராலும் கூறப்படும் ஜேடிஎஸ் கட்சியோ தாங்கள் கிங்காக இருக்க வேண்டும் என்று ஆதிசுஞ்சனகிரி மடத்தில் குமாரசாமி யாகம் நடத்தினார். அது போல் காங்கிரஸ் தலைமையகத்துக்கு வெளியேவும் யாகம் நடத்தப்படுகிறது.

மூன்று பெரிய கட்சிகளும் பூஜை, புனஷ்காரம் என்று ஒரே கூத்தடித்து வருவது பார்ப்போரை திகைக்க வைக்கிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kumarasay offers prayers at Adichunchanagiri Mahasamsthana Math in Nagamangala ahead of counting. Congress also conducts yagam in outside their party office.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற