நிலத்தின் விலை விர்ர்ர்ர்ர்.. ஒரே வாரத்தில் 30% உயர்வு! அமராவதியை ‘ஹாட் ஸ்பாட்’ ஆக்கிய நாயுடு

Subscribe to Oneindia Tamil

அமராவதி: ஆந்திர மாநிலத்தின் முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுள்ள நிலையில், அமராவதியைத் தலைநகரமாக மாற்றும் திட்டம் வேகம் பிடித்துள்ளது. இதனால் கடந்த சில வாரங்களில் மட்டும் நிலங்களின் மதிப்பு 20 முதல் 30% வரை உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம், மத்திய அரசால் தெலுங்கானா மற்றும் ஆந்திரா என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பிரிவினைக்குப் பின்னர் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆந்திராவின் முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சி சார்பாகச் சந்திரசேகர ராவ் ஆட்சி அமைத்தார். இதன் மூலம் தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களுக்கு இரண்டு மாநிலங்கள் கிடைத்தன.

Chandrababu Naidu Andhra Pradesh

இரண்டு மாநிலங்களும் ஹைதராபாத் நகரத்தைத் தலைநகரமாகக் கொள்ள உரிமை கோரின. ஆனால், ஆந்திர மாநிலத்திற்கு என்று புதிய தலைநகரம் உருவாக்கப்படும் வரை ஹைதராபாத் நகரம் இரண்டு மாநிலத்திற்கும் பொதுவான தலைநகரமாகச் செயல்படும் என முடிவு எடுக்கப்பட்டது.

அதனையடுத்து தனியான ஒரு தலைநகரை உருவாக்க அன்றைய ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்தார்.ஆந்திராவின் தலைநகரைக் கட்டமைக்கக் கிட்டத்தட்ட 50,000 கோடி ரூபாய் செலவில் பசுமைத் தலைநகராக அமராவதியை உருவாக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால், அமராவதியைத் தலைநகரமாக ஏற்பதில் கட்சிகள் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன.

இந்தப் பிரச்சினை நாயுடு அரசுக்குத் தலைவலி தரும் நகரமாக உருவெடுத்தது. இறுதியில் 2019 ஆட்சி அதிகாரத்தை ஜெகன்மோகன் ரெட்டியிடம் பறிகொடுத்தது. இதனால் நாயுடுவின் அமராவதி கனவு முற்றாகக் கருகிப் போனது.

2019இல் புதிய முதல்வராக வந்த ஜெகன்மோகன் ரெட்டி, விசாகப்பட்டினம், கர்னூல், அமராவதி ஆகிய மூன்று நகரங்கள் ஆந்திராவின் தலைநகரமாகச் செயல்படும் எனப் புதிய திட்டத்தை அறிவித்தார். அதன்படி விசாகப்பட்டினம் அரசு நிர்வாகத்திற்கான தலைநகரமாகவும் அமராவதி சட்டப்பேரவை இயங்கும் தலைநகரமாகவும் நீதித்துறையின் தலைநகரமாக கர்னூல் செயல்படும் என அரசு அறிவித்தது. ஆனால், அது மக்களைப் பல வழிகளில் அலைக்கழிக்க வைக்கும் என்று விமர்சனம் எழுந்தது.

ஒருவர் சட்டசபைக்காக ஒரு நகரத்திற்கும் வழக்கு விசாரணைக்காக ஒரு நகரத்திற்கு மாறி மாறி பயணிக்க முடியாது என்றும் ஏழை எளிய மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது என்றும் பரவலாக விமர்சனம் எழுந்தது.

ஆனாலும் இந்த விமர்சனங்களைக் கடந்து ஜெகன் அரசு விசாகப்பட்டினம் ருஷிகொண்டாவில் சுமார் 500 கோடியில் ஜெகன்மோகன் ரெட்டி அரசு ரகசியமாக ஒரு பங்களாவைக் கட்டியது. இதை ஜெகன்மோகனின் ஹெஸ்ட் அவுஸ் என்று தெலுங்கு தேசம் கட்சியினர் கூறினர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வளர்ந்தது. உடனே ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.

அது அரசு செலவில் கட்டப்பட்டு வரும் பங்களா என்றும் அது, குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகிய உயர் பொறுப்பில் இருப்பவர்கள் வருகை தரும்போது தங்குவதற்கான மாளிகை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

கடந்த மாதம் ஆந்திரப் பிரதேச முதலமைச்சராகப் பதவியேற்பதற்கு ஒரு நாள் முன்னர், அமராவதி மட்டுமே மாநிலத்தின் ஒரே தலைநகராக இருக்கும் என்றும் சந்திரபாபு நாயுடு உறுதிமொழியளித்தார். மூன்று தலைநகரங்கள் என்பது விளையாட்டு காரியம் இல்லை என்றும் அவர் விமர்சித்திருந்தார். மேலும் விசாகப்பட்டினம் பொருளாதார தலைநகராகவும் மேம்பட்ட சிறப்பு நகரமாகவும் உருவாக்கப்படும் என்று சொன்னார்.

இந்நிலையில்தான் ஆந்திராவில் அமராவதி தலைநகரம் அமைப்பதற்கான வேலைகள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. பொதுமக்கள் முதல்வரின் மகன் லோகேஷை சந்தித்து தங்களால் ஆன நிதியை நன்கொடையாக அளித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற லோகேஷிடம் பார்வையற்ற ஒருவர் தனது ஓய்வூதியத்திலிருந்து 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை அளித்திருந்த செய்தி ஆந்திர மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.

தலைநகரை உருவாக்குவதற்காக சந்திரபாபு நாயுடு கள ஆய்வு செய்து வருகிறார். அந்தச் செய்தி தரைமட்டத்தில் படுத்துக் கிடந்த ரியல் எஸ்டேட் தொழிலை மீண்டும் உயிர்பெற வைத்துள்ளது. ரியல் எஸ்டேட் தொழிலில் பெயர் புகழ்பெற்ற Anarock தரவுகளின்படி, அமராவதியில் வணிக மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்காகக் கிட்டத்தட்ட 8,859 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தகவல் கிடைத்துள்ளது.

"நல்ல அரசாங்கம் அமையும்போது ரியல் எஸ்டேட் தொழில் என்பது செழிக்கும். அதற்கு ஃபேஸ் வேல்யூ முக்கியம். பிராண்டு இமேஜ் முக்கியம். இந்த இரண்டும் நாயுடுவுக்கு உள்ளது. அவர் ஒரு சிறந்த நிர்வாகி. மக்கள் அவரை நம்புகின்றனர். அவரால் ரியல் எஸ்டேட் தொழில் மட்டும் இல்லை, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு என அனைத்துத்துறைகளும் வளர்ச்சி பெறும். அவர் ஆந்திராவின் நம்பர் ஒன்று மாநிலமாக மாற்றுவார்" இந்தியா டுடே ஊடகத்திற்குப் பேசியுள்ள ரியல் எஸ்டேட் நிபுணர் ஒருவர்.

புதிய தலைநகரம் உருவாவது பற்றி தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் கனகமேடலா ரவீந்திரகுமார், "அமராவதி ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரம். அதைப் பற்றி மாற்றுக் கருத்தே இல்லை. இதை அபிவிருத்தி செய்வோம்" என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ளார். நாயுடு ஆட்சிக்கு வந்தவுடன் அமராவதியில் நிலத்தின் விலை சதுர அடிக்கு ரூ. 6,000 முதல் 7,000 வரை உயர்ந்துள்ளது. அப்படியே விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.

"கடந்த முறை நாயுடு அரசு ஏற்கனவே நீதிமன்ற வளாகங்கள், பொது அலுவலகங்கள் ஆகியவற்றுக்காக உள்கட்டமைப்பு பணிகளை தொடங்கி இருந்தது. நிலையில், மூலதன மேம்பாட்டின் முதல் கட்டத்தை முடிக்க ஆண்டுக்கு 9,000 கோடிக்கு மேல் முதலீடு தேவைப்படுகிறது" என்கிறார் தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கவுன்சில் (NAREDCO) தலைவர் ஹரிபாபு தெரிவித்தார்.

மாநில நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நாராயணா பேசுகையில், அமராவதியை மூன்று கட்டங்களாக அபிவிருத்தி செய்ய சுமார் ரூ.1 லட்சம் கோடி செலவாகும் என்று கூறியிருந்தார். மேலும் இந்த வேலைகள் இரண்டரை ஆண்டுகளில் முடிக்கப்படும் என்றும் கூறியிருந்தார். அமராவதியையும் ஹைதராபாத்தையும் இணைக்கும் கிருஷ்ணா நதி மீது பாலம் ஒன்று ஏற்கனவே கட்டி திறந்துள்ளனர்.

இந்த வசதி வணிக ரியல் எஸ்டேட் துறைக்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதிற்கு உதவியாக இருப்பதுடன் ஒரு கேம் சேஞ்சராக இருக்கும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. மேலும், அமராவதி ரிங் ரோடு, விசாகப்பட்டினம் அருகே உள்ள விமான நிலையம் ஆகியவை பல முதலீடுகளை ஈர்க்கும் என்றும் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

அமராவதியில் வணிகம் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்காகக் கிட்டத்தட்ட 8,859 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 6,143 ஏக்கர் வணிகச் செயல்பாட்டுக்கும், மற்ற பகுதி தொழில்துறை பயன்பாட்டுக்கு எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

"அமராவதியில் சராசரியாக ஒரு சதுர அடி விலை ரூ. 6,000-8,000 ஆக இருக்கிறது. ஆனால், ஹைதராபாத்தில் சதுர அடி. ரூ.10,000 முதல் 13,000 வரை உள்ளது. ஆகவே பலரும் விலை குறைவான நிலத்தின் பக்கம் தங்களின் கவனத்தைத் திருப்புவார்கள்" என்று ஹைதராபாத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் எக்ஸ்பர்ட் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+