எல்லை பதற்றம்: வடகிழக்கு மாநிலங்களில் அமைதியை சீர்குலைக்க லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் சதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிலிகுரி: வடகிழக்கு மாநிலங்களில் அமைதியை சீர்குலைத்து நாட்டுக்கு எதிராக யுத்தம் நடத்துமாறு தீவிரவாதிகளுக்கு லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தளபதி அமிர் ஹம்சா அழைப்பு விடுத்துள்ள ரகசிய வீடியோ அம்பலமாகியுள்ளது.

பூடானின் டோக்லாம் பீடபூமியை ஆக்கிரமிக்கும் சீனாவின் முயற்சியை நமது ராணுவம் தடுத்துள்ளது. இதனால் சிக்கிம் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Lashkar's deadly plan for North-East revealed

இதனிடையே மும்பை தாக்குதல் வழக்கில் தேடப்படும் தீவிரவாதியும் லஷ்கர் இ தொய்பாவின் மூத்த தளபதியுமான அமிர் ஹம்சா பேசிய ரகசிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானின் லாகூரில் ஜூலை 19-ந் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த வீடியோ. டோக்லாம் பிரச்சனையை முன்வைத்து நாட்டுக்கு எதிராக சிக்கிம், பூட்டான் மற்றும் டார்ஜிலிங்கில் யுத்தம் நடத்துங்கள் என தீவிரவாதிகளுக்கு அதில் ஹம்சா உத்தரவிட்டு பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Hizbul Mujahideen and Lashkar-e-Tayiba provoke terrorists to wage a war against India|Oneindia News

ஒரு வங்கதேச தனிநாட்டை உருவாக்கியதற்காக நாம் வடகிழக்கின் 7 மாநிலங்களில் யுத்தம் நடத்துவோம். ஜமாத் உல் முஜாஹிதீன் வங்கதேசம் இயக்கத்துடன் இணைந்து இந்த யுத்தத்தை நடத்துவோம் என ஹம்சா மிரட்டல் விடுத்திருப்பதும் அந்த வீடியோவில் உள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Lashkar-e-Tayiba has called for strikes across the state of North East. In a video a Lashkar-e-Tayiba commander Amir Hamza is seen urging his men to wage a war in the north eastern states of Sikkim and Darjeeling.
Please Wait while comments are loading...