ஐஏஎஸ் அதிகாரி ரவியின் மனைவி பெங்களூர் மருத்துவமனையில் அனுமதி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் தற்கொலை செய்து கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவியின் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரில் கடந்த திங்கட்கிழமை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியான டிகே ரவி. அவரது தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகவும், அந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் கர்நாடக மாநில அரசு ரவியின் வழக்கை சிபிஐக்கு மாற்றவில்லை.

இந்நிலையில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த ரவியின் மனைவி குசுமா பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை குசுமாவின் தந்தை தெரிவித்துள்ளார்.

`Late Karnataka IAS officer DK Ravi's wife hospitalised in Bengaluru due to stress

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

என் மகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து செய்தித்தாள்களில் வந்த செய்திகளை பார்த்த பிறகு தான் அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. தவறான செய்தி வெளியிட்ட வர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்வோம் என்றார்.

இதற்கிடையே கோலாரைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் ரவியை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றுமாறு அரசு அதிகாரி ஒருவரை போனில் மிரட்டியது தெரிய வந்துள்ளது. அவர்களின் உரையாடல் பதிவு தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+