வெள்ளித்தட்டில் என்னதான் சாப்பிட்டாங்க.. சித்தராமையா டின்னருக்கு ரூ.10 லட்சம் செலவாம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: வெள்ளி தட்டுகளில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு ரூ.10 லட்சம் செலவில் விருந்து அளிக்கப்பட்டது என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை கல்பூர்கிக்கு சித்தராமையா சென்றிருந்தார். அப்போது அவருடன் அமைச்சர்கள் பலரும் சென்றனர்.

அன்று இரவு அவருக்கு மாவட்ட நிர்வாகம் விருந்து வழங்கியது. மாநிலச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த விருந்தை அரசியலுக்காக பயன்படுத்துகிறது பாஜக.

பணம் செலவீடு

மாவட்ட முன்னாள் பா.ஜ.க. தலைவர் ராஜ்குமார் தெல்கூர் இதுபற்றி கூறுகையில், மாவட்ட நிர்வாகமானது, முதல்வருக்கு மிகச்சிறந்த இரவு உணவை வழங்கியது, அவரது அமைச்சரவை சகாக்களுக்கும், மூத்த அதிகாரிகளும் பெரும் பணத்தை செலவழித்தனர்.

வெள்ளித்தட்டு

வெள்ளித்தட்டு

நீர்ப்பாசன அமைச்சர் எம்.பி. பாட்டில், கல்புர்கி மாவட்ட பொறுப்பு அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல், யாதகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் பிரியங்கா கார்கே, முன்னாள் அமைச்சர் சரணபசப்பா உள்ளிட்டோருக்கு வெள்ளி தட்டுகள் மற்றும் கிண்ணங்களில் இரவு உணவு பரிமாறப்பட்டுள்ளது.

ரூ.10 லட்சம்

ரூ.10 லட்சம்

ஒவ்வொரு தட்டு உணவுக்கும் ரூ.800 செலவானதாம். ஹைதராபாதில் இருந்து ஒரு சிறப்பு சமையல் நிபுணர் இந்த விருந்தை தயாரிக்க வரவழைக்கப்பட்டிருந்துள்ளார். ஆக மொத்தம் விருந்துக்கு ரூ.10 லட்சம் செலவாகியுள்ளது.


சோசலிஸ்டு

சோசலிஸ்டு

தன்னை சோசலிஸ்டு என்று சித்தராமைய்யா தெரிவித்துக் கொள்கிறார். ஆனால் பொதுமக்கள் பணத்தை வீணடித்திருக்கிறார். மக்கள் மத்தியில் நேர்மையானவர்கள் என்று தம்மை அடையாளங் காட்டிக் கொள்பவர்கள் இவ்வாறு மக்கள் பணத்தை செலவு செய்துள்ளது அதிரச்சியளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
lavish lunch allegedly costing Rs 10 lakh to Karnataka Chief Minister Siddaramaiah and 24 other cabinet ministers

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X