வரலாற்று வெற்றி.. அடுத்த தலைமுறைக்கே உத்வேகம்.. இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு குவியும் வாழ்த்து!
மும்பை: மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் ஆகியுள்ளது இந்திய மகளிர் அணி. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐசிசி மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நவி மும்பையில் இன்று நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. இதன் மூலம் முதல் முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது இந்திய மகளிர் அணி.

லீக் சுற்றுப் போட்டிகளின் போது 3 ஆட்டங்களில் தோல்வி அடைந்ததால் அரை இறுதிக்கு தகுதி பெற முடியுமா? என்ற மோசமான நிலையில் இருந்த இந்திய அணி, அதன்பின் அரை இறுதியில் ஆஸ்திரேலியாவையும், இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவையும் வீழ்த்தி உலகக் கோப்பையை கைப்பற்றி உள்ளது. இறுதிப் போட்டியில் ஷபாலி வர்மா 87 ரன்கள் சேர்த்ததும், தீப்தி சர்மா 58 ரன்கள் சேர்த்ததுடன், 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதும் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றன.
உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்திய அணியின் அற்புதமான வெற்றி. இறுதிப் போட்டியில் வீராங்கனைகளின் செயல்திறன் சிறந்த திறமை மற்றும் நம்பிக்கையால் குறிக்கப்பட்டது. போட்டி முழுவதும் அணி விடாமுயற்சியைக் காட்டியது. எங்கள் வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள். இந்த வரலாற்று வெற்றி எதிர்கால சாம்பியன்களை விளையாட்டுகளில் ஈடுபட ஊக்குவிக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிவிட்டுள்ள செய்தியில், "உலக சாம்பியனான இந்திய அணிக்கு வணக்கம். 2025 ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை எங்கள் அணி உயர்த்தி, இந்தியாவின் பெருமையை விண்ணுக்கு உயர்த்தியதால், இது தேசத்திற்கு ஒரு மகுடம் சூட்டும் தருணம். உங்கள் அற்புதமான கிரிக்கெட் திறமைகள் மில்லியன் கணக்கான சிறுமிகளுக்கு உத்வேகத்தின் பாதையை வகுத்தன. ஒட்டுமொத்த அணிக்கும் வாழ்த்துகள்." எனத் தெரிவித்துள்ளார்.
What a moment for Indian cricket! 🇮🇳
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) November 2, 2025
India reigns supreme as our women in blue lift the ICC Women’s World Cup! 🏆
Heartiest congratulations to #TeamIndia on this extraordinary triumph, a magnificent display of talent, composure, and teamwork.
This victory will inspire… pic.twitter.com/0BeB5oibkb
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்திய கிரிக்கெட்டுக்கு என்ன ஒரு பெருமைமிகு தருணம்! நமது பெண்கள் அணி ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை வென்றதில் இந்தியா உச்சத்தை எட்டியுள்ளது! திறமையான, அமைதியான கூட்டுமுயற்சியின் அற்புதமான வெளிப்பாட்டிற்காக இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த வெற்றி அடுத்த தலைமுறையினரை பெரிய கனவுகளைக் காணவும் தைரியமாக விளையாடவும் ஊக்குவிக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications