இரையைத் தேடி மின்கம்பத்தில் ஏறிய சிறுத்தை பரிதாப பலி... தெலுங்கானாவில் அதிர்ச்சி
தெலுங்கானாவில் இரையைத் தேடி மின்கம்பத்தில் ஏறிய சிறுத்தை மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலியானது விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்: இரையைத் தேடி மின்கம்பத்தில் ஏறிய சிறுத்தை மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலியான சம்பவம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிஜாமாபாத் மாவட்டத்தில் மல்லரம் வனப் பகுதியில் இந்த சம்பவம் நிகழந்துள்ளது. ஒரு சிறுத்தை வழித்தவறி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்தது. இதனையடுத்து உள்ளூர்வாசிகள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இதனிடையே, மரம் என்று நினைத்து அங்குள்ள மின் கம்பத்தில் சிறுத்தை ஏறியதால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. இதனையறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், அதிகாரிகள் மின்சாரத்தை துண்டித்து, மின்கம்பியில் சிக்கியிருந்த சிறுத்தையின் உடலை கீழே இறக்கினர்.
இந்த சிறுத்தையானது உணவு தேடி காட்டில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் வந்ததாகவும், இரையை பிடிக்க மின்கம்பத்தை மரம் என்று நினைத்து ஏறியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறந்து போன சிறுத்தையைக் காண மக்கள் திரண்டது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications