பீகார் தேர்தல்: ஜேடியூ கூட்டணிக்கு குட்பை சொன்ன பாஸ்வான் கட்சி- பாஜகவுடன் மட்டும் கூட்டணியாம்!
பீகார் தேர்தல்: ஜேடியூ கூட்டணிக்கு குட்பை சொன்ன பாஸ்வான் கட்சி- பாஜகவுடன் மட்டும் கூட்டணியாம்!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஜேடியூ கூட்டணியில் இருந்து விலகுவதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி அறிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியுடன் மட்டுமே கூட்டணி சேர்ந்துள்ளதாகவும் தேர்தலுக்குப் பின்னர் பாஜக தலைமையிலான் அரசுக்குத்தான் ஆதரவு தருவோம் என்றும் லோக் ஜனசக்தி தெரிவித்துள்ளது.
பீகாரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆர்ஜேடி- காங்கிரஸ்- இடதுசாரிகள் தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது.

நிதிஷ் மீது அதிருப்தி
பாஜக-ஜேடியூ அணியில் லோக் ஜனசக்தி கட்சியும் இடம் பெற்றிருந்தது. ஆனால் ஜேடியூ தலைவரும் முதல்வருமான நிதிஷ்குமாரை மிக கடுமையாக லோக் ஜனசக்தி விமர்சித்து வந்தது.

பாஸ்வான் கட்சி ஆலோசனை
இதனால் பாஜக-ஜேடியூ கூட்டணியில் லோக் ஜனசக்தி இடம்பெறுமா? என்கிற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் பீகார் தேர்தல் கூட்டணி தொடர்பாக லோக் ஜனசக்தி இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இதில் நிதிஷ்குமார் மீதான விமர்சனங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஜேடியுடன் கூட்டணி சேரவில்லை
இந்த ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அப்துல் காலிக் கூறியதாவது; ஜேடியூவுக்கும் எங்களுக்கும் தத்துவார்த்த சிக்கல்கள் இருக்கின்றன. அதனால் ஜேடியூவுடனான கூட்டணியில் இருந்து பீகார் தேர்தலில் நாங்கள் போட்டியிடப் போவதில்லை.

பாஜகவுடன் கூட்டணி
ஆனால் பாரதிய ஜனதாவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளோம். பீகார் சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் பாரதிய ஜனதா கட்சி தலைமையில் ஆட்சி அமைக்க லோக் ஜனசக்தி உதவும் . இவ்வாறு அப்துல் காலிக் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications