பாஜகவில் இணைந்து லோக்சபா தேர்தலில் போட்டியா? மவுனம் கலைத்த யுவராஜ் சிங்.. கொண்டாடும் ரசிகர்கள்!
சண்டிகர்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் விரைவில் பாஜகவில் இணைந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் பஞ்சாப்பில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தான் அதுதொடர்பாக மவுனம் கலைத்து விளக்கம் அளித்துள்ள நிலையில் யுவராஜ் சிங்கை ரசிகர்கள் கொண்டாட தொடங்கி உள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஓய்வுக்கு பிறகு அரசியல் கட்சியில் இணைந்து எம்பி, எம்எல்ஏக்கள் ஆகி வருகின்றனர். பஞ்சாப்பை சேர்ந்த முன்னாள் வீரர் சித்து பாஜகவில் எம்பியாக இருந்தார். அதன்பிறகு காங்கிரஸில் இணைந்து அமைச்சராகவும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராகவும் செயல்பட்டார்.

அதேபோல் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான கவுதம் காம்பீர் பாஜகவில் இணைந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார். மேலும் முன்னாள் இந்திய வீரரரான சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஆம்ஆத்மி சார்பில் பஞ்சாப்பில் இருந்து ராஜ்யசபா எம்பியாக உள்ளார்.
அந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும், அதிரடி பேட்ஸ்மேன்னுமான யுவராஜ் சிங் விரைவில் அரசியலில் என்ட்ரி கொடுக்க உள்ளதாக கடந்த ஒரு வாரமாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர். பஞ்சாப்பை சேர்ந்த யுவராஜ் சிங் தற்போது சண்டிகரில் வசித்து வருகிறார். அவர் பாஜகவில் இணைந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் யுவராஜ் சிங் தரப்பில் இருந்து உண்மை அல்லது பொய் என எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் அவர் பாஜகவின் மத்திய அமைச்சர் ஒருவருடன் நெருக்கமாக இருப்பதும், அவர் மூலம் தான் பாஜகவில் என்ட்ரி கொடுக்க உள்ளதாகவும் தொடர்ந்து பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் தான் பாஜகவில் இணைந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக வெளியான தகவல் பற்றி யுவராஜ் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: ‛‛ஊடகங்களில் தவறான செய்திகள் வருகிறது. நான் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிடவில்லை. எனது ஆர்வம் என்பது வேறு விதமாக உள்ளது. பல்வேறு திறமைகளை கொண்டவர்களுக்கு ஆதரவு வழங்குவதிலும், உதவுவதிலும் தான் உள்ளது. எனது YOUWECAN அறக்கட்டளையின் மூலம் அதனை தொடர்ந்து செய்வேன்'' என தெரிவித்துள்ளார்.
Contrary to media reports, I'm not contesting elections from Gurdaspur. My passion lies in supporting and helping people in various capacities, and I will continue to do so through my foundation @YOUWECAN. Let's continue making a difference together to the best of our abilities❤️
— Yuvraj Singh (@YUVSTRONG12) March 1, 2024
யுவராஜ் சிங்கின் இந்த அறிவிப்பை அவரது ரசிகர்கள் வரவேற்று கொண்டாடி வருகின்றனர். ஏனென்றால் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற முறையில் யுவராஜ் சிங் என்பவர் அனைவருக்கும் பிடித்த நபராக இருக்கிறார். ஆனால் அரசியலில் ஏதேனும் ஒரு கட்சியில் அவர் இணைந்தால் மாற்று கட்சியில் இருப்பவர் வருத்தமடையலாம். இதனை தான் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது உலககோப்பை ஹீரோவான உங்களின் முடிவு வரவேற்கத்தக்கது என அவரது எக்ஸ் பதிவுக்கு கீழ் ஏராளமான ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications