பெண்கள் விஷயத்தில் பேசுறது ஒன்ணு, செய்யுறது ஒண்ணு... பாஜக மீது புகார்
பாட்னா: பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை தடுப்பதாக எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டிய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, பீகார் மக்களவை தேர்தலில் 3 பெண்களுக்குத்தான் சீட் கொடுத்துள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, பெண்களுக்கு மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுத்ததாக எதிர்க்கட்சிகளை திட்டி தீர்த்தது,
ஆனால் இப்போது தேசிய ஜனநாய கூட்டணியே பீகாரில் பெண்களுக்கு சீட்டு கொடுக்கும் விஷயத்தில் நியாயமாக நடந்து கொள்ளவில்லை. அங்கு 3 பெண்களுக்கு மட்டுமே சீட்டு கொடுத்திருக்கிறது.

பீகார் தேர்தல்
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19 தேதி வரை ஏழுக் கட்டங்களாக நடக்கிறது. நாடு முழுவதும் மட்டுமல்ல, பீகாரில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்குமே 7 கட்டங்களாத்தான் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

பெண்களுக்கு குறைந்த சீட்
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி , பாஜக மற்றும் லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்து வருகின்றன. இந்த தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட 3 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மூன்று பெண்கள்
தேசிய ஜனநாயகக் கூட்டணி பீகாரில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை மார்ச் 23ம் தேதி அறிவித்தது. இதில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் கவிதா சிங் என்ற பெண், சிவான் தொகுதியில் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் ராமதேவி என்பவர் ஷெஓஹா தொகுதியில் போட்டியிடுகிறார். இதேபோல் லோக் ஜனசக்தி சார்பில் வீணா சிங் என்ற பெண் வைஷாலி தொகுதியில் போட்டியிடுகிறார்.

காங்.கூட்டணி
ஆனால் லல்லு பிரசாத் யாதவ்வின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் ராகுல் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி பீகாரில் 9 பெண்களுக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்துள்ளது.

சீட் மறுப்பு
பீகாரில் பாஜக, ஜக்கிய ஜனதா தளம் கட்சிகள் தலா 17 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி 6 தொகுதிகளிலும் இந்த முறை போட்டியிடுகின்றன. இதில் தலா ஒரு பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, இதற்கு விளக்கம் அளித்த பீகார் பாஜக துணை தலைவர் திவேஷ் குமார், பெண்களுக்கு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும் தான், ஆனால் கடந்த முறையைவிட (30 தொகுதிகள்), இந்த முறை குறைவாக போட்டியிட்டுள்ளோம். இதுபோன்ற சில பல காரணங்கள் இருக்கிறது என்றார்.

மத்தியில் பிரதிநிதித்துவம்
அதேநேரம் பாஜக அரசு மத்தியில் ஏரளமான பெண்களுக்கு வாய்ப்பு அளித்திருப்பதாக குறிப்பிட்ட திவேஷ் குமார், நிர்மலா சீதாராமன் (பாதுகாப்பு அமைச்சர்), சுஷ்மா சுவராஜ் (வெளியுறவு) ,ஸ்மித்ரா மகாஜன்(சபாநயகர்), உள்பட பல பெண்கள் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்றார்.

ஓரே பதில்
இதற்கிடையே ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் பாஜக பாடிய அதே பல்லவியை பாடியுள்ளது. ஜக்கிய ஜனதா தளம் கட்சி செய்தி தொடர்பாளர் நீராஜ் குமார் கூறுகையில், எங்க கட்சி நிறைய பெண்களுக்கு சீட் கொடுக்க ஆசைப்பட்டது. ஆனால் வெறும் 17 தொகுதியில் போட்டியிடுவதால் முடியவில்லை. பீகார் முதல்வர் நிதீஷ்குமார், உள்ளாட்சி தேர்தலில் பெண்களக்கு 35 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க விரும்புகிறார். கூடிய விரைவில் அது நடக்கும். 33 சதவீத இடஒதுக்கீடு மக்களவையில் நிறைவேற்றப்பட்டால் முதல் ஓட்டு எங்களுக்குத்தான், அதன் பிறகு அனைத்து கட்சிகளுமே பின்பற்றும் என்றார்.

மம்தா கட்சி
இந்த தேசத்தில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீட்டை வரும் மக்களவை தேர்தலில் நிறைவேற்றி இருப்பது இரண்டே கட்சிகள் தான் . மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் 41 சதவீத பெண்கள் போட்டியிடுகிறார்கள். இதேபோல் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் சார்பில் 33 சதவீத பெண்கள் போட்டியிடுகிறார்கள்.
-
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
பீகார் முசாபர்பூர் மருத்துவமனையில் அதிகாலை தீ விபத்து.. 10 பேர் பலி.. ICU-வில் நடந்த கொடூரம்!












Click it and Unblock the Notifications