லோக்சபாவிலும் நிறைவேறியது லோக்பால் மசோதா!
டெல்லி: தெலுங்கானா தொடர்பான அமளிக்கு இடையே லோக்சபாவில் இன்று லோக்பால் மசோதா நிறைவேறியது. இம்மசோதாவுக்கு எதிர்ப்பு சமாஜ்வாடி கட்சி லோக்சபாவில் வெளிநடப்பு செய்தது.
ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதாவை கொண்டுவர வேண்டும் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உள்ளிட்டோர் வலியுறுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து மத்திய அரசு லோக்பால் மசோதாவை தாக்கல் செய்தது.,
ஆனால் அதை வலுவானதாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது. இதைத் தொடர்ந்து அம்மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று ராஜ்யசபாவில் 5 மணி நேர விவாதத்துக்குப் பின்ன் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று லோக்சபாவில் லோக்பால் மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாடி கட்சி வெளிநடப்பு செய்தது. மேலும் தெலுங்கானா விவகாரம் தொடர்பாகவும் லோக்சபாவில் அமளி நிலவியது.
இந்த அமளிக்கு நடுவே லோக்பால் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இரு சபைகளிலும் லோக்பால் மசோதா நிறைவேறியதால் அது சட்டமாகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications