நெருங்கவே முடியாது.. மத்திய பிரதேசத்தில் இனி காங்கிரஸ் ஆட்சி தான்.. காலியாகும் பாஜக -கருத்து கணிப்பு
போபால்: மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் எனவும், பாஜக ஆட்சியை இழக்கும் எனவும் புதிய கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இரு கட்சிகளும் எத்தனை தொகுதிகளில் வெல்லும் என இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:
மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக இருந்து வருகிறார். இந்நிலையில் தான் மத்திய பிரதேச மாநில சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது.

இதனால் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி மத்திய பிரதேசத்தில் உள்ள 230 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 17 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. மத்திய பிரதேசத்தை பொறுத்தமட்டில் பாஜக, காங்கிரஸ் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சி 116 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
மத்திய பிரதேசத்தை பொறுத்தமட்டில் நீண்டகாலமாக பாஜக ஆட்சி நடந்து வருகிறது. கடந்த தேர்தலில் முதலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தாலும் கூட ஜோதிர்ஆதித்ய சிந்தியா விலகி பாஜகவில் இணைந்ததால் மீண்டும் தாமரை மலர்ந்தது. சிவ்ராஜ் சிங் சவுகான் மீண்டும் முதல்வர் இருக்கையில் அமர்ந்தார். இந்நிலையில் தான் வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி மீண்டும் அரியணை ஏற காங்கிரஸ் திட்டமிட்டு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. அதேவேளையில் காங்கிரஸை தோற்கடித்து மீண்டும் அதிகாரத்தை தக்கவைக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.
இதற்கிடையே தான் மத்திய பிரதேச தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இதில் பெரும்பாலான கருத்து கணிப்புகள் காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி இருக்கும் எனவும், எந்த கட்சியை ஆட்சியில் அமைத்தாலும் நூலிழை அளவில் தான் எம்எல்ஏக்களின் வித்தியாசம் என்பது இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தான் LokPoll சார்பில் மத்திய பிரதேச சட்டசபை தேர்தலுக்கான தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 72,405 பேரிடம் இந்த கருத்து கணிப்பு என்பது மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதன் முடிவு என்பது தற்போது வெளியாகி உள்ளது. இந்த கருத்து கணிப்பு என்பது பாஜகவுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையிலும், காங்கிரசுக்கு உற்சாகம் வழங்கும் வகையிலும் அமைந்துள்ளது.
அதாவது மத்திய பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் வரும் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. அதன்படி மொத்தம் உள்ள 230 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 45 முதல் 47 சதவீத ஓட்டுகளை பெற்று 130 முதல் 142 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறாக பாஜக 39 முதல் 41 சதவீத ஓட்டுக்களுடன் 84 முதல் 98 சட்டசபை தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் பாஜக ஆட்சியை இழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மற்றவர்கள் 8 முதல் 10 சதவீத ஓட்டுக்களை பெற்று பூஜ்ஜியம் முதல் 4 தொகுதிகளை கைப்பற்றலாம் என இந்த கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications