லக்னோ ஜூவில் நடுங்கும் விலங்குகள்: ஹீட்டர் போட்டு சூடேற்றும் நிர்வாகம்
லக்னோ: லக்னோவில் உள்ள விலங்கியல் பூங்காவில் இருக்கும் விலங்குகள் குளிரில் வாடாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
வட இந்தியாவில் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக அளவில் குளிராக உள்ளது. அதிலும் டெல்லியில் கடுங்குளிராக உள்ளது. டெல்லியில் இன்று காலை குறைந்தபட்ச வெட்பநிலை 4 டிகிரி செல்சியஸாக இருந்தது.

வட இந்தியாவில் நிலவும் கடுங்குளிர், பனிமூட்டத்தால் மக்கள் வீடுகளில் முடங்கி வருகின்றனர். பனிமூட்டதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மனிதர்கள் குளிரை தாங்க முடியாமல் உள்ளனர்.
இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள விலங்கியல் பூங்காவில் இருக்கும் விலங்குகளை குளிரில் இருந்து காக்கத் தேவையான நடவடிக்கைகளை பூங்கா நிர்வாகம் எடுத்துள்ளது.
விலங்குகள் உள்ள அறைகள் ஹீட்டர் மூலம் சூடாக்கப்படுகிறது. மேலும் தீ மூட்டியும் சூடு ஏற்றப்படுகிறது. குளிர் காலத்தில் தாக்குப்பிடிக்க விலங்குகளுக்கு சிறப்பு வைட்டமின் மாத்திரைகளும், சத்தான உணவுகளும் அளிக்கப்படுகிறது.
விலங்கியல் பூங்காவில் உள்ள பல வகை பாம்புகள் குளிர் காலம் என்பதால் தூங்கி வருகின்றன. அவை குளிர்காலம் முடியும் வரை எழாமல் தூங்கும். பாம்புகளின் உடலில் சூடு தானாக ஏற்படாது என்பதால் அவை உள்ள அறைகளில் மண் பானையில் 100 வாட் பல்ப் எரிய வைக்கப்பட்டுள்ளது. பாம்புகள் இருக்கும் அறைகளின் தரையில் சாக்குப்பை விரிக்கப்பட்டுள்ளது.
குரங்குகளுக்கு முட்டையும், கடலையும் அளிக்கப்படுகிறது. சில விலங்குகள் போர்வையால் போர்த்தி வைக்கப்படுகிறது. யானைகளுக்கு கரும்பும், மான்களுக்கு கரும்பு இலையும் உணவாக அளிக்கப்படுகிறது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications