"அம்மா நான் குர்குரே திருடல".. தற்கொலைக்கு முன் 12 வயது சிறுவன் எழுதிய கடிதம்! கலங்கடித்த வார்த்தை
கொல்கத்தா: ‛‛அம்மா நான் திருடன் இல்லைமா.. நான்‛குர்குரே' திருடவில்லை. கடைக்கார மாமா கடையில் இல்லாததால் சாலையில் கிடந்த குர்குரேவை தான் எடுத்தேன் அம்மா.. எனக்கு குர்குரே பிடிக்கும் அம்மா.. நான் உண்மையில் திருடவில்லை. தற்கொலை செய்த என்னை மன்னித்து விடுங்கள் அம்மா'', இந்த கலங்கடிக்கும் வரிகள் தான் 12 வயது நிரம்பிய சிறுவனின் கடைசி வார்த்தைகள்..
ஆம், அந்த மாணவன் இறந்துவிட்டான். செய்யாத தவறுக்கு திருட்டு பட்டம் கட்டியதால் அவமானம் தாங்க முடியாமல் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்வதற்கு முன்பாக 7 ம் வகுப்பு மாணவன் உதிர்த்த வார்த்தைகள் தான் இது. அந்த சிறுவன் யார்? எதற்காக தற்கொலை செய்து கொண்டான்? என்பதை கேட்டால் நிச்சயம் கண்கள் கலங்கித்தான் போகும்.

அதாவது மேற்கு வங்க மாநிலம் பாசிம் மெதினிபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணேந்து தாஸ். வயது 12. 7 ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி பருவத்தில் துள்ளி திரியும் சிறுவர், சிறுவர்களை போல் கிராமத்தில் உலா வந்தான். இவனுக்கு ‛குர்குரே' என்றால் கொள்கை பிரியம். தினமும் கடைக்கு சென்று ‛குர்கிரே' வாங்கி தின்பதை வாடிக்கையாக வைத்திருந்தான்.
நமக்கு கூட சிறுவயதில்அண்ணாச்சி கடை, அக்கா கடை, தாத்தா கடை என்று ஏதாவது ஒரு ‛பேவரைட்' கடை இருந்திருக்கும். இதற்கு நமக்கு பிடித்த தின்பண்டங்கள் அங்கு இருப்பது தான் முக்கிய காரணம். அப்படித்தான் கிருஷ்ணேந்து தாஸ்க்கும் ‛பேவரைட்' கடை ஒன்று உள்ளது. அந்த கடையை வைத்திருப்பவரின் பெயர் சுபாங்கர் திக்சீத். இவர் சொந்தம் இல்லை என்றாலும் கூட கிருஷ்ணேந்து தாஸ், மாமா என்று தான் அழைப்பான்.
நேற்றைய தினம் கிருஷ்ணேந்து தாஸிடம் காசு இருந்தது. அதனை எடுத்து கொண்டு ‛குர்குரே' வாங்க மாமா சுபாங்கர் தீக்சீத் கடைக்கு ஓடினான் மூச்சிறைக்க ஓடி கடையை அடைந்தான். கடையில் சுபாங்கர் தீக்சீத் இல்லை. இதையடுத்து அந்த சிறுவன், ‛‛மாமா நான் கிருஷ்ணேந்து தாஸ் வந்து இருக்கிறேன். குர்குரே வாங்க வந்து இருக்கேன். நீங்க எங்க இருக்கீங்க?'' என கடையில் இருந்து குரல் எழுப்பினார். பதில் எதுவும் வரவில்லை.
இதனால் ‛குர்குரே' சுவைக்க வந்த சிறுவன் ஏமாற்றம் அடைந்தான். இதையடுத்து சோகத்தில் கடையில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்றான். அப்போது சாலையில் ஒரு ‛குர்குரே' பாக்கெட் கிடந்துள்ளது. அதனை சிறுவன் எடுத்து சுவைத்தான். இந்த வேளையில் கடைக்கு வந்த சுபாங்கர் தீக்சீத், ஆள் இல்லாத நேரத்தில் கடையில் இருந்து சிறுவன் குர்குரேவை திருடியதாக நினைத்தார்.
மேலும் சிறுவனை விரட்டி சென்று பிடித்து தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பொதுமக்கள் முன்னிலையில் சிறுவனை திட்டி அவமானப்படுத்தினார். சிறுவன் பேச முயன்றபோது அவனை மிரட்டி உட்கார வைத்தார். இதனால் சிறுவன் அழுதபடி எதையும் கூறவில்லை. சம்பவம் குறித்து சிறுவனின் தாய்க்கு தெரிவிக்கப்பட்டது. அவர் அங்கு சென்றார். அப்போது சிறுவனுடன் சேர்ந்து அவனது தாயையும் கடைக்காரர் சுபாங்கர் தீக்சீத் திட்டி தீர்த்தார். அதன்பிறகு கடைக்காரரிடம் சிறுவனின் தாய் மன்னிப்பு கோரிய நிலையில் இருவரும் வீடு திரும்பினர்.
வீடு திரும்பிய சிறுவன் அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டான். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சிறுவனின் தாய் மற்றும் உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சிறுவன் பூச்சிக்கொல்லி மருந்து (விஷம்) குடித்து வாயில் நுரை தள்ளி மயங்கி கிடந்தான். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவன் இறந்ததாக தெரிவித்தனர்.
இதற்கிடையே தான் சிறுவன் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் கிடைத்தது. அந்த கடிதத்தில், ‛‛அம்மா நான் திருடன் இல்லைமா.. நான்‛குர்குரே' திருடவில்லை. கடைக்கார மாமா கடையில் இல்லாததால் சாலையில் கிடந்த குர்குரேவை தான் எடுத்தேன் அம்மா.. எனக்கு குர்குரே ரொம்ப பிடிக்கும் அம்மா.. நான் உண்மையில் திருடவில்லை. இதுதான் எனது கடைசி வார்த்தைகள்.. தற்கொலை செய்த என்னை மன்னித்து விடுங்கள் அம்மா'' என்று எழுதியுள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி உள்ள நிலையில் கடைக்காரர் சுபாங்கர் தீக்சீத் தலைமறைவாகி உள்ளார். இந்த சம்பவம் மேற்கு வங்கத்தை கலங்கடித்துள்ளது.
-
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
கல்லூரியில் ரகசிய பெட் ரூம்கள்.. உள்ளே பாக்கெட் பாக்கெட்டாக ஆணுறைகள்! கூடவே கைத்துப்பாக்கி வேற! -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications