ஷாக்கில் காங்.. நூலிழையில் மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்கும் பாஜக? பரபர கருத்து கணிப்பு
போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் தான் நடைபெற உள்ள தேர்தலில் மயிரிழை வித்தியாசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியாகி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். கடந்த 2018 ம் ஆண்டில் மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. தற்போது 5 ஆண்டு சட்டசபையின் பதவிக்காலம் முடியும் நிலையில் உள்ளது.

இதனால் மீண்டும் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 17 ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் டிசம்பர் மாதம் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
மத்திய பிரதேசத்தை பொறுத்தமட்டில் மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 116 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்த மாநிலத்தை பொறுத்தமட்டில் காங்கிரஸ், பாஜக இடையே தான் நேரடியாக போட்டி உள்ளது. இதனால் வரும் தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க பாஜக போராடி வரும் நிலையில், பாஜகவை வீழ்த்தி அரியணை ஏற காங்கிரஸ் வியூகம் வகுத்துள்ளது.
இந்நிலையில் தான் மத்திய பிரதேச சட்டசபை தேர்தலையொட்டி தேர்தலுக்கு முந்தைய பல்வேறு கருத்து கணிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. பல கருத்து கணிப்புகள் பாஜக-காங்கிரஸ் இடையே பலமான போட்டி உள்ளது. இதில் 2 கட்சிகளுக்கும் தலா 100க்கும் அதிகமான இடங்கள் கிடைக்கும் எனவும், அதோடு ஆட்சியை பிடிக்கும் கட்சிக்கும், 2ம் இடம் பிடிக்கும் கட்சிக்கும் இடையே வெற்றி தொகுதிகளின் எண்ணிக்கைகளின் வித்தியாசம் என்பது வெறும் ஒற்றை இலக்கத்தில் மட்டும் தான் இருக்கும் என தெரிவிக்கின்றன.
இத்தகைய சூழலில் தான் தற்போது மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் தொடர்பாக இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த முடிவு என்பது பாஜகவுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் உள்ளது. அதாவது மாநிலத்தில் மீண்டும் பாஜக தான் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பாஜக 119 தொகுதிகளில் வெற்றி பெறும். அந்த கட்சிக்கு 46 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க 116 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதும். ஆனால் பாஜக தனி பெரும்பான்மையை தாண்டி கூடுதலாக 3 இடங்களை சேர்த்து 119 தொகுதிகளில் வெல்லும் என இந்த கருத்து கணிப்பு கூறியுள்ளது.
அதேவேளையில் இந்த கருத்து கணிப்பு என்பது காங்கிரஸ் கட்சிக்கு ஷாக்கை அளித்துள்ளது. பாஜக 119 தொகுதிகளில் வெல்லும் நிலையில் காங்கிரஸ் 107 இடங்களில் மட்டுமே ஜெயிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு காங்கிரஸ் கட்சிக்கு 43 சதவீத ஓட்டுக்கள் மட்டுமே கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியாகி உள்ளது. அதோடு தேர்தலுக்கு இன்னும் 13 நாட்கள் உள்ள நிலையில் கடந்த முறை குறைந்த ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த தொகுதிகளை குறிவைத்து காங்கிரஸ் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications