Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“உயிருடன் விடும் அளவு கருணை கொண்டவர்! எனவே..” சிறுமியை சீரழித்த கயவனுக்கு நீதிமன்றம் காட்டிய சலுகை

Subscribe to Oneindia Tamil

போபால்: பாலியல் பலாத்கார குற்றவாளியின் ஆயுள் தண்டனையை 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையாக குறைத்து மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் குற்றவாளியின் தண்டனையை குறைக்க நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள காரணம் குறித்து பலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

அதேபோல பாலியல் குற்றங்களுக்கு எவ்வித தண்டனை குறைப்பும் செய்யக் கூடாது என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தீர்ப்பு

தீர்ப்பு

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து 15 ஆண்டுகள் தான் அனுபவித்த சிறைவாசத்தை கணக்கில் கொண்டு தண்டனை குறைப்பு செய்ய வேண்டும் என்று கோரி அம்மாநில உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

தண்டனை

தண்டனை

இந்த வழக்கை நீதிபதிகள் சுபோத் அபியங்கர் மற்றும் சத்யேந்திர குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையை ரத்து செய்து 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையாக அதனை குறைப்பதாக தீர்ப்பளித்துள்ளது. ஆனால், தீர்ப்பில் இந்த தண்டனை குறைப்புக்கு கூறப்பட்டுள்ள காரணம் கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. இந்த காரணம் குறித்து சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் கேள்வியெழுப்பி வருகின்றனர். அதேபோல சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பான விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

 பாலியல் பலாத்காரம்

பாலியல் பலாத்காரம்

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் கூலி வேலை செய்துவந்த நபர் ஒருவர் தனது குடிசைக்கு பக்கத்து குடிசையில் உள்ள 4 வயது சிறுமியை ஒரு ரூபாய் தருவதாக கூறி தனது குடிசைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். சம்பவத்தை சிறுமியின் பாட்டி பார்த்து கூச்சலிட்ட நிலையில் இந்த விவகாரம் வெளியில் தெரிய வந்துள்ளது. பின்னர் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

தண்டனை குறைப்பு

தண்டனை குறைப்பு

சோதனையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட நபர் குற்றவாளி என்று கூறி இந்தூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. கடந்த 15 ஆண்டுகளாக தண்டனை பெற்று வந்த அவர், தன்னுடைய தண்டனை காலத்தை குறைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு விசாரணையில், 4 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த குற்றம் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்று நீதிபதிகள் கூறினர். ஆனாலும், "குற்றவாளி குழந்தையை கொல்லாமல் உயிருடன் விட்டுவிடும் அளவுக்கு கருணை கொண்டவராக இருக்கிறார். எனவே அவருடைய ஆயுள் தண்டனையை 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையாக மாற்றி தீர்ப்பு" வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பாலியல் குற்றங்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை வேண்டும் என்று கோரி வரும் நிலையில், இக்குற்றத்தில் ஈடுபட்ட நபருக்கு நீதிமன்றம் தண்டனையை குறைத்துள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+