காங். வீசின செம்ம பந்து..இப்படியும் தேர்தல் வாக்குறுதியா? மிரளும் ம.பி.. இந்தியாவிலேயே முதல் முறை!
போபால்: இந்தியா அரசியல் வரலாற்றில் தேர்தல் அறிக்கைகளில் இதுவரை இடம்பெறாத வகையில் முதல் முறையாக மத்திய பிரதேச மாநிலத்தில், "ஐபிஎல் அணியை உருவாக்குவோம்" என்கிற ஒரு வாக்குறுதியை வழங்கி உள்ளது காங்கிரஸ் கட்சி.
230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேச சட்டசபைக்கு நவம்பர் 17-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.

மத்திய பிரதேசத்தில் 2018 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்தான் வென்றது. ஆனால் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்த்துவிட்டு பாஜக அரியணை ஏறியது. தற்போது ம.பி. தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்பது பெரும்பாலானவற்றின் முடிவு.
இந்நிலையில் மத்திய பிரதேச சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் இன்று வெளியிட்டது. 59 வாக்குறுதிகளைக் கொண்ட 106 பக்க தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
ம.பி.காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
மத்திய பிரதேச மாநிலத்துக்காக தனியாக ஒரு ஐபிஎல் அணி உருவாக்கப்படும்.
ரூ25 லட்சத்துக்கான மருத்துவ காப்பீடு வழங்கப்படும்
ரூ10 லட்சத்துக்கான விபத்து காப்பீடு வழங்கப்படும்
ரூ 2 லட்சம் வரையிலான விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும்.
பெண்களுக்கு மாதம் ரூ1,500 உதவித் தொகை வழங்கப்படும்.
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை ரூ500க்கு விற்பனை செய்யப்படும்
மாணவ மாணவியருக்கான பள்ளி கல்வி இலவசமாக வழங்கப்படும்.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ1,500 முதல் ரூ3,000 வரை வழங்கப்படும்.
100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.
நெல் குவிண்டால் கொள்முதல் விலை ரூ2,500; கோதுமை குவிண்டால் கொள்முதல் விலை ரூ2,600 என வழங்கப்படும்.
அரசு வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு - ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்படும்.
மத்திய பிரதேசத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.
இவ்வாறு காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications