For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ம.பியில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங். அமைச்சரவை கலைப்பு.. இரவோடு இரவாக அதிரடி.. திருப்பம்!

Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது. முதல்வர் கமல்நாத் இரவோடு இரவாக நடந்த மீட்டிங்கில் அதிரடி முடிவு எடுத்துள்ளார்.

Recommended Video

    ம.பியில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங். அமைச்சரவை கலைப்பு

    மத்திய பிரதேசத்தில் ஆட்சி கவிழ்வதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளது. அங்கு எப்போது வேண்டுமானாலும் காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் தலைமையிலான ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கடந்த வாரம் அங்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்எல்ஏக்களை பாஜகவினர் கடத்தி வைத்து இருந்ததாக புகார் வைத்தது. அவர்களை வைத்து ஆட்சியை கவிழ்க்க பாஜகவினர் திட்டமிடுகிறார்கள் என்று மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி கூறியது.

    ரிசார்ட் அரசியல்

    ரிசார்ட் அரசியல்

    இதனால் அங்கு ரிசார்ட் அரசியல் மீண்டும் சூடுபிடித்தது. டெல்லி அருகே குர்கானில் உள்ள ஐடிசி ஹோட்டலில் இவர்கள் எல்லோரும் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். ஆனால் இதில் 8 எம்எல்ஏக்கள் திரும்பி வந்தனர். இன்னும் இரண்டு காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் டெல்லியில்தான் இருக்கிறார்கள். இவர்களை காங்கிரஸ் தலைவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இவர்கள் பாஜகவினர் உடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

    ஆட்சி என்ன ஆகும்

    ஆட்சி என்ன ஆகும்

    கமல்நாத் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று பாஜக இப்படி செய்கிறது என காங்கிரஸ் குற்றஞ்சாட்டி இருந்தது. இதனால் மத்திய பிரதேசத்தில் எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழும் நிலை ஏற்படலாம் என்று கூறுகிறார்கள். ஆனால் தற்போது புதிய திருப்பமாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 17 பேரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. மூத்த காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா உட்பட 17 எம்எல்ஏக்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

    பெங்களூரில் தங்கி உள்ளனர்

    பெங்களூரில் தங்கி உள்ளனர்

    இவர்கள் எல்லோரும் பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கி உள்ளனர் என்று கூறப்படுகிறது. சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் இவர்கள். ஆட்சியை கவிழ்க்கும் வகையில் இவர்கள் எல்லோரும் பெங்களூரில் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் கமல்நாத் இடையிலான சண்டை முற்றி இருக்கிறது.கமல்நாத் முதல்வர் ஆனது, அம்மாநில காங்கிரஸ் மூத்த உறுப்பினர் சிந்தியாவிற்கு பிடிக்கவில்லை.

    கடும் எதிர்ப்பு

    கடும் எதிர்ப்பு

    தற்போது சிந்தியா கமல்நாத் அரசை நேரடியாக விமர்சிக்க தொடங்கி உள்ளார். இந்த நிலையில்தான் தற்போது இவர் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் மாயமாகி உள்ளார். இதனால் அங்கு எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழலாம் என்கிறார்கள்.இந்த 16 எம்எல்ஏக்களை சமாதானம் செய்யும் தற்போது மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது.

    மொத்தமாக

    மொத்தமாக

    16 எம்எல்ஏக்கள் பெங்களூரில் ரிசார்ட்டில் தங்கிய நிலையில் அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது. முதல்வர் கமல்நாத் இரவோடு இரவாக நடந்த மீட்டிங்கில் அதிரடி முடிவு எடுத்துள்ளார். அம்மாநிலத்தில் 22 அமைச்சர்களும் இரவோடு இரவாக பதவி விலகி உள்ளனர். 16 எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவை பதவி கொடுத்து சமாதானம் செய்யும் வகையில் அவர் இந்த செயலில் இறங்கி உள்ளார். நேற்று மாலை அவர் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.

    நிலை என்ன

    நிலை என்ன

    மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு 120 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்.அங்கு காங்கிரஸ் கட்சிக்கு 113 எம்எல்ஏக்களும், காங்கிரசுக்கு ஆதரவு தரும் பகுஜன் சமாஜ் கட்சியில் 2 எம்எல்ஏக்களும், சமாஜ்வாதி கட்சியில் ஒரு எம்எல்ஏவும், நான்கு சுயேட்சைகளும் உள்ளனர்,அங்கு மெஜாரிட்டி பெற 116 எம்எல்ஏக்கள் தேவை. பாஜகவிற்கு அங்கு 107 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது.

    English summary
    Madhya Pradesh: Kamal Nath empties the whole cabinet after rebels went to Bangalore later the night.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X