கணவரை பிரிந்து பிடித்தவரோடு வாழ்ந்த பெண்.. தோளில் சுமந்தபடி 3 கி.மீ.. சித்ரவதையின் உச்சம்
மத்திய பிரதேசம்: பழங்குடியின பெண்ணை அவருடைய கணவரின் உறவினர் ஒருவர் தோள்பட்டையில் சுமந்தபடி நடக்க வைத்து துன்புறுத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாக சுமூகமாக பேசி பிரிந்துள்ளனர். அதன்பிறகு, அந்த பெண் தனக்கு பிடித்த மற்றொரு நபருடன் இணைந்து அருகில் உள்ள கிராமத்தில் வாழ்ந்து வந்திருக்கிறார்.

இந்நிலையில், கடந்த வாரம் அப்பெண்ணின் முன்னாள் கணவரின் குடும்பத்தினர், அவரது வீட்டுக்குள் நுழைந்து, பலவந்தமாக வெளியேற்றி, கணவனின் உறவினர் ஒருவரை தோள்பட்டையில் சுமக்க வைத்து 3 கிலோ மீட்டருக்கு நடக்கச் செய்து துன்புறுத்தியதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
அப்பெண் நடந்து செல்லும் போது, கம்பு, தடி போன்றவற்றை கொண்டு அவரை அடிப்பதும், அதை கொண்டாடுவதும் என்று ஒரு கூட்டமே பின்தொடர்ந்து நடந்து செல்லும் வீடியோவும் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அப்பெண் அளித்த புகாரையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீஸார் இதுவரை நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜுலை மாதமும் இதே போன்று மத்திய பிரதேசத்தில் பெண் ஒருவர் துன்புறுத்தப்பட்ட சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications