மகாராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சவாண் ராஜினாமா- ஜனாதிபதி ஆட்சி அமலாகிறது!!
மும்பை: மகாராஷ்டிராவில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து அம்மாநில முதல்வரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரித்விராஜ் சவாண் இன்று தமது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாகிறது.
288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு அக்டோபர் 15-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை கடைசி நாள். இந்த நிலையில் ஆளும் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் எழுந்தது.
இதனால் காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்த தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகியதை அடுத்து, காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்தது.

வாபஸ் கடிதம் கொடுத்த தேசியவாத காங்.
இதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரசின் சட்டசபை கட்சி தலைவரும், துணை முதல்வருமான அஜித்பவார் நேற்று இரவு கவர்னர் மாளிகைக்கு சென்றார். அங்கு அவர் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தார்.
அப்போது பிரித்விராஜ் சவாண் அரசுக்கு தேசியவாத காங்கிரஸ் அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதற்கான கடிதத்தை அவர் கொடுத்தார். இதனால் பிரித்விராஜ் சவாண் அரசு பெரும்பான்மையை இழந்தது.

ஆளுநர் தீவிர ஆலோசனை
இதனைத் தொடர்ந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவரும் ஆளுநருடன் ஆலோசனை
இந்நிலையில் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரும் மகாராஷ்டிரா சட்டசபை எதிர்கட்சி தலைவருமான எக்னாத் காட்சே இன்று ஆளுநர் சி. வித்யாசகர் ராவை பிற்பகல் சந்தித்தார்.

டிஸ்மிஸ் செய்ய கோரிக்கை
அப்போது ஆட்சி செய்ய போதிய பலம் இல்லாததால் பிரிதிவிராஜ் தலைமையிலான அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய கடிதம் ஒன்றையும் வழங்கினார். மேலும் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஆளுநருடன் முதல்வர் சந்திப்பு
மேலும் முதல்வர் பிரித்விராஜ் சவாணும் கவர்னரை இன்று சந்தித்தார். முதலில் இது வழக்கமான மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று கூறப்பட்டது.

ராஜினாமா
பின்னர் சில மணிநேரத்தில் முதல்வர் பிரித்விராஜ் சவாண், தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ஆளுநரை மீண்டும் சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார்.

ஜனாதிபதி ஆட்சி அமல்...
இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வருகிறது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications