போதைப்பொருள் வழக்கில் கொச்சியில் மலையாள நடிகர், 3 மாடல் அழகிகள் கைது
கொச்சி: கேரளாவில் போதைப் பொருள் வைத்திருந்த மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, 4 பெண்களுடன் போலீசில் சிக்கியுள்ளார்.
மலையாள திரை உலகில் வளர்ந்து வரும் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. அவர் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கடவன்தாரா பகுதியில் இருக்கும் கிங் குழும தலைவரும், தொழில் அதிபருமான முகமது நிஜாமின் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் சாக்கோ போதைப் பொருள் வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் வெள்ளிக்கிழமை இரவு அந்த வீட்டில் திடீர் என்று சோதனை நடத்தினர். அப்போது போலீசார் 10 கிராம் கொகைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். போலீசார் அந்த வீட்டில் இருந்த சாக்கோ, உதவி இயக்குநர் பிளெஸி, 3 இளம் மாடல் அழகிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவர்கள் 5 பேரும் இன்று காலை வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் வைத்திருந்த கொகைன் கோவாவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது என்று போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
வீட்டின் பாதுகாவலரை காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற வழக்கில் நிஜாம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications