For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆரம்பத்திலேயே அடித்து ஆடும் மமதா.. மத்திய அரசின் பிளானுக்கு தொடக்கத்திலேயே முற்றுப்புள்ளி.. அதிரடி!

இந்திய குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் என்ஆர்சி எனப்படும் குடிமக்களின் தேசிய பதிவேடு இரண்டிற்கும் அடிப்படியாக இருக்கும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தனது

Google Oneindia Tamil News

கொல்கத்தா: இந்திய குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் என்ஆர்சி எனப்படும் குடிமக்களின் தேசிய பதிவேடு இரண்டிற்கும் அடிப்படியாக இருக்கும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தனது மாநிலத்தில் மொத்தமாக தடை செய்துள்ளார்.

இந்திய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. முக்கியமாக மேற்கு வங்கம், டெல்லி, வடகிழக்கு மாநிலங்களில் மிக தீவிரமாக போராட்டம் நடந்து வருகிறது. மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மிக தீவிரமாக இரண்டு நாட்களாக இதற்கு எதிராக போராடி வருகிறார்.

இந்திய குடியுரிமை சட்ட திருத்தத்தின் படி இந்தியாவில் குடியேறிய கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் மட்டுமே குடியுரிமை பெற முடியும். மாறாக இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர்கள் குடியுரிமை இருந்தாலும் அதை இழக்க நேரிடும் .

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கொல்கத்தாவில் 2-வது நாளாக மமதா பேரணி! குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கொல்கத்தாவில் 2-வது நாளாக மமதா பேரணி!

என்ன சட்டம்

என்ன சட்டம்

இந்த சட்டத்தோடு சேர்த்து நாடு முழுக்க என்ஆர்சியை கொண்டு வர மத்திய அரசு முயன்று வருகிறது. குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் என்ஆர்சி இரண்டையும் ஒன்றாக சேர்த்து செயல்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது. என்ஆர்சி எனப்படும் இந்திய குடிமக்களின் தேசிய பதிவேட்டில் (National Register of Citizens) ஒரு குறிப்பிட்ட வருடம் குறிக்கப்பட்டு அதற்கு பின் இந்தியாவில் குடியேறிய மக்களின் பட்டியல் எடுக்கப்படும்.

என்ன உதாரணம்

என்ன உதாரணம்

அதாவது உதாரணமாக 1970க்கும் பின் இந்தியாவில் குடியேறிவர்களின் பட்டியல் எடுக்கப்படும், இந்த பட்டியலில் 1970க்கு முன் இந்தியாவில் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லாதவர்கள் எல்லோரின் பெயரும் சேர்க்கப்படும். 1970க்கு முன் ஒருவர் இந்தியாவில் பிறந்து வளர்ந்து அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்றாலும் அவரின் பெயரும் இதில் சேர்க்கப்படும். இந்த பட்டியலை வைத்துதான் என்ஆர்சியை செயல்படுத்துவார்கள்.

என்ன இஸ்லாமியர்கள்

என்ன இஸ்லாமியர்கள்

பின் அந்த பட்டியலில் உள்ள இஸ்லாமியர்கள் தங்கள் குடி உரிமையை, இந்தியாவில் இருந்ததற்கான ஆதாரத்தை நிரூபிக்க வேண்டும். இந்திய குடியுரிமை சட்டப்படி இந்த பட்டியலில் இந்துக்கள் இருந்தால் அவர்கள் குடி உரிமை பெறுவார்கள். இஸ்லாமியர்கள் இருந்தால் அகதிகள் முகாமில் சேர்க்கப்படுவார்கள் அல்லது நாட்டை விட்டு வெளியே அனுப்பப்படுவார்கள். இந்த மொத்த செயல்பாட்டிற்கும் அடிப்படை மக்கள் தொகை கணக்கெடுப்புதான்.

மக்கள் தொகை

மக்கள் தொகை

மக்கள் தொகை கணக்கெடுப்பை, என்பிஆர் என்று கூறுவார்கள். அதாவது தேசிய மக்கள் தொகை பதிவேடு. மத்திய அரசின் இந்த பதிவேட்டை, மாநில அரசுதான் உருவாக்கும். மாநில அரசின் அறிவிப்பின் பெயரில், மாநில அரசு அதிகாரிகள்தான் இந்த கணக்கெடுப்பை எடுப்பார்கள். இந்த பதிவேடு புதுப்பிக்கப்பட்டால்தான் குடி உரிமை சட்ட திருத்தம் , என்ஆர்சி என்று எதுவாக இருந்தாலும் செயல்படுத்த முடியும்.

இரண்டுக்கும் முக்கியம்

இரண்டுக்கும் முக்கியம்

அதாவது என்ஆர்சி, குடியுரிமை சட்டம் இரண்டுக்கும் பிள்ளையார் சுழியே இந்த மக்கள் தொகை பதிவேடுதான். இப்போது மமதா பானர்ஜி நேரடியாக இதில் கை வைத்துள்ளார். தங்கள் மாநிலத்தில் என்ஆசி, குடியுரிமை சட்ட திருத்தம் இரண்டும் கொண்டு வரப்படாது என்று கூறியவர், இதற்கு அடிப்படையாக விளங்கும் தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிகளுக்கு தடை விதித்துள்ளார்.

என்ன செய்கிறார்

என்ன செய்கிறார்

மாநில அதிகாரிகள், விஏஓ என்று யாரும் இந்த பணிகளை மேற்கொள்ள கூடாது, அறிவிக்கும் வரை பணிகளை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசும் மாநில அரசின் உதவி இன்றி இந்த லிஸ்டை உருவாக்க முடியாது. இதனால் மேற்கு வங்கத்தில் மத்திய பாஜக அரசு எப்படி இந்திய குடியுரிமை சட்டத்தை கொண்டு வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

English summary
CM Mamata stops all NPR works in her state to oppose Citizenship Amendment and NRC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X