திருப்பதியில் கொத்துக்கொத்தாக நகையும் கட்டுக்கட்டாக பணமும் வைத்திருந்தவர் கைது- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதி ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் கட்டுக்கட்டாக பணம் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பதி ரயில் நிலையத்தில், பயணிகளின் பைகளை ஸ்கேனர் மூலம் சோதனை செய்த போது சென்னை சௌகார்பேட்டையைச் சேர்ந்த பீர்பால் என்பவரின் பையில் கட்டுக்கட்டாக பணமும் பல லட்சம் மதிப்புள்ள நகைகளும் இருந்துள்ளன.

 A man does not have proper documents for jewels and money arrested

அவரிடம் போலீசார் விசாரணை செய்த போது அந்த நகைகளுக்கான எந்த ஆவணங்களும் இல்லாத காரணத்தால் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிறகு இம்மாதிரியான விஷயங்கள் நடைபெறாது என கூறப்பட்டது. ஆனால் புதிதாகப் புழக்கத்துக்கு வந்த இரண்டாயிரம் ரூபாய் கட்டுக்கட்டாக இப்படி பல இடங்களில் சிக்குவது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Tirupati Railway station Birbal had lot of jewels and money withaout proper documents and police arrested.
Please Wait while comments are loading...