மதுரை குலுங்க குலுங்க.. கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய சித்திரை திருவிழா! களைகட்டிய மாமதுரை!
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் கோலாகலமாக துவங்கிய நிலையில் மதுரை நகரம் எங்கும் விழா கோலம் பூண்டுள்ளது. நிகழ்ச்சியுடன் கோலகலமாக தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளாக வரும் 26-ஆம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், 27-ம் தேதி திக்கு விஜயம்,28-ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், 29-ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது.
மதுரை மட்டுமல்ல தமிழகமே எதிர்பார்த்து காத்திருக்கும் முக்கிய விழா என்றால் அது மதுரை சித்திரை திருவிழா தான். மதுரையை அரசாலும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை மணமுடித்து அண்ணன் கள்ளழகரை பார்க்க காத்திருக்கும் சித்திரை திருவிழாவில் மதுரையே குலுங்கி தான் போய்விடும்.
16 நாட்கள் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த விழாவில் மீனாட்சி திருக்கல்யாணமும். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதும் முக்கிய வைபவங்கள். திருவிழா என்றாலே மதுரை தான், மதுரை என்றாலே சித்திரைத் திருவிழா தான்.

மீனாட்சி திருக்கல்யாணம்
16 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பல விழாக்கள் நடைபெற்றாலும், சித்திரைத் திருவிழா தான் மிகவும் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்டு பெண்கள் புது தாலி கயிறு மாட்டிக்கொண்டால் மீனாட்சியைப் போலவே தங்களுக்கும் தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை அடைவோம் என்பது நம்பிக்கை.
வைகை ஆற்றில் அழகர்
அதுமட்டுமல்லாமல் கள்ளழகர் மண்டுக முனிவருக்கு சாப விமோசனம் கொடுப்பதற்காக மதுரைக்கு வரும்போது வைகை ஆற்றில் இறங்கும் வைபோகத்தைக் காண கண் கோடி வேண்டும். சித்திரை திருவிழாவில் 16வது நாளில் தேவேந்திர பூஜை, அதனை தொடர்ந்து மலைக்குச் சென்று அடைவதுடன் சித்திரை திருவிழா நிறைவடையும். குறிப்பாக அழகரின் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள், மதுரையில் கூடுவர்.
கொடியேற்ற நிகழ்ச்சி
அந்த வகையில் சிறப்பு பெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலில் சித்திரை திருவிழா இன்று காலை சுவாமி சன்னதி முன்பாக உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சியுடன் வெகுவிமர்சையாக தொடங்கியது. முன்னதாக கொடிமரம் முன்பு மீனாட்சி, சுந்தரேஸ்வரர் ப்ரியாவிடையுடன் எழுந்தருள நடைபெற்ற சிறப்பு பூஜைகளையடுத்து மங்கள வாத்தியங்கள் வேதமந்திரங்கள் முழங்கிட இன்று காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடி ஏற்றம் விமர்சையாக நடைபெற்றது
சித்திரை திருவிழா
சித்திரை திருவிழா இன்று துவங்கியுள்ள நிலையில் அம்மனும் சுவாமியும் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலாவரும் நிகழ்வும் நடைபெறுகிறது. சித்திரை திருவிழா இன்று துவங்கிய நிலையில் அம்மனும் சுவாமியும் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்வும், நடைபெறுகிறது.
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
விழாவின் முக்கிய நிகழ்வுகளாக வரும் 26-ஆம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், 27-ம் தேதி திக்கு விஜயம்,28-ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், 29-ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் ஒன்றாம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழா நடைபெறவுள்ளது. சித்திரை திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் கோலாகலமாக துவங்கும் நிலையில் மதுரை நகரம் எங்கும் விழா கோலம் பூண்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications