ஆண் நண்பர்களுடன் ரீல்ஸ்.. கண்டித்த காதலன்.. மறுத்த காதலி.. உல்லாசத்திற்கு பிறகு கொன்று எரித்த இளைஞர்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஆண் நண்பர்களுடன் தனது காதலி வீடியோ எடுத்ததால் அவருடன் உல்லாசம் அனுபவித்த இளைஞர், அந்த பெண்ணை கொன்று எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் யாதகிரி தாலுக்கா அரகெரேவை சேர்ந்தவர் மாருதி ரதோடு. இவர் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பென்டெலா வெர்மா என்ற இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து இருவரும் காதலித்து வந்தனர். பென்டலா வெர்மா எப்போதுமே சமூகவலைதளங்களை அதிகமாக பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. டிக் டாக் போன்ற செயலிகளில் தனது ஆண் நண்பர்களுடன் அவர் வீடியோ எடுத்தும் வந்துள்ளார். டிக்டாக் தடை செய்யப்பட்ட நிலையில் வெவ்வேறு செயலிகளில் அவர் ஆண்களுடன் வீடியோ எடுத்ததாக தெரிகிறது.
இந்த விவகாரம் மாருதி ரத்தோடுக்கு தெரியவந்தது. இதையடுத்து "இதற்கு முன்னர் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது ஆண்களுடன் நீ நெருக்கமாக வீடியோ எடுத்து போட கூடாது" என பென்டெலாவிடம் மாருதி கறாராக கூறியிருந்ததாக தெரிகிறது. ஆனால் இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அவர்கள் என் நண்பர்கள், அவர்களுடன் வீடியோ போட கூடாது என எப்படி சொல்லலாம். நீ வருவதற்கு முன்பே அவர்கள் எனக்கு நண்பர்கள் என பென்டெலா, மாருதியிடம் கூறியிருந்தாராம். இதனால் மாருதி ஆத்திரமடைந்தாலும் அந்த பெண்ணிடம் அதை காட்டிக் கொள்ளாமல் ஆசை வார்த்தை கூறி தனது ஊருக்கு அழைத்து சென்றுள்ளார் மாருதி.
அங்கு தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த பெண்ணுடன் அவர் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. அப்போதும் ஆண் நண்பர்களுடன் வீடியோ எடுக்கக் கூடாது என மாருதி அந்த பெண்ணிடம் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. ஆனால் அந்த பெண் மீண்டும் கோபமடைந்து மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரமடைந்த மாருதி ரதோடு, பென்டெலாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

இதையடுத்து போலீஸிடம் சிக்காமல் இருப்பதற்காக அவரது உடலை தனக்கு சொந்தமான நிலத்தில் போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இதையடுத்து பயத்தின் காரணமாக மாருதி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அந்த நேரத்தில் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்ததாக தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தி அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது காதலியை கொன்றுவிட்டு அச்சத்தின் காரணமாக தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு காரணம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளுதல், அதாவது பொசசிவ்னஸ் என உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். ஒரு பொருளோ நபரோ அதன் மீது அளவுக்கு அதிகமான ஆசை, பாசம் வைத்துவிட்டால் அவற்றை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் தனக்குதான் தனக்கு மட்டும்தான் சொந்தம் என சிலர் கருதும் போதுதான் நண்பர்களுடன் பழகுவதும் தவறாக தெரிந்து இறுதியில் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்கள் நடக்கின்றன. எப்போதுமே பொசசிவ்னஸ் என்ற ஒன்று இருக்கக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications