பெண்கள் உடைமாற்றும் அறை நோக்கி சிசிடிவி கேமராவை திருப்பி வைத்த ஃபேப்இந்தியா ஊழியர் சிக்கினார்
பனாஜி: கோவாவில் உள்ள ஃபேப்இந்தியா கடையில் இருந்த சிசிடிவி கேமராவை பெண்கள் உடை மாற்றும் அறை நோக்கி திருப்பி வைத்த ஊழியரை போலீசார் கண்டுபிடித்துவிட்டனர்.
கோவா சென்ற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கன்டோலிம் நகரில் உள்ள ஃபேப்இந்தியா கடையில் துணி வாங்கினார். அதை போட்டுப் பார்க்க பெண்கள் உடை மாற்றும் அறைக்கு சென்ற அவர் கேமரா மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து உள்ளூர் எம்.எல்.ஏ. மைக்கேல் லோபோவுக்கு தகவல் கொடுத்தார். லோபோ இது குறித்து போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் அந்த கடைக்கு சீல் வைத்து 4 ஊழியர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். விசாரணையில் சிசிடிவி கேமரா துணிகள் வைக்கப்பட்டிருந்த பக்கம் தான் இருந்ததும் அதை யாரோ பெண்கள் உடை மாற்றும் அறை நோக்கி திருப்பி வைத்தது தெரிய வந்தது. கன்டோலிம் கடையில் சிசிடிவி கேமராவை பொருத்திய நிறுவனமும் யாரோ கேமராவை திருப்பி வைத்ததை உறுதி செய்தது.
இந்நிலையில் கேமராவை திருப்பி வைத்த ஊழியரை போலீசார் கண்டுபிடித்துவிட்டனர். ஆனால் விசாரணையில் இடையூறு ஏதும் ஏற்படாமல் இருக்க அவரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
கேமரா விவகாரம் தொடர்பாக கோவா போலீசார் இதுவரை 10 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ள ஃபேப்இந்தியா சிஇஓ உள்ளிட்ட உயர் அதிகாரிகள் 11 பேர் இன்னும் இரண்டு அல்லது நான்கு நாட்களில் விசாரணைக்கு வருவதாக தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications