கர்நாடகாவில் 300 பாம்புகளை பிடித்தவர் பலி.. 301வது பாம்பை அஜாக்கிரதையாக பிடித்தபோது பரிதாபம்
யாதகிரி: கர்நாடக மாநிலத்தில் பாம்பு பிடிப்பவர், குடிபோதையில் பாம்பை பிடித்தபோது பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த அந்த நபர் இதுவரை 300க்கும் மேற்பட்ட பாம்புகளை கிராமங்களில் பிடித்து பின்னர் வனச்சரகத்தில் விட்டுள்ளார்.
வழக்கம்போல் இந்த முறையும் பாம்பு பிடிக்கும்போது அது 5 முறை தொடர்ந்து கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்தார்.

பாம்பு பிடிக்கும் பசவராஜ்
கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் உள்ள கொடிஹாலா கிராமத்தில் பசவராஜ் பூஜாரி என்பவர் பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். கொடிஹாலா மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்குள் எங்கு பாம்பு வந்தாலும் இவரைத்தான் அழைப்பார்களாம். இவரும் உடனடியாக அங்கு சென்று பாம்புகளை லாவகமாக பிடித்து பின்னர் காடு, வனப்பகுதிகளில் விடுவது வழக்கம்.

அழையா விருந்தாளியாய் பாம்பு
இந்நிலையில் நேற்று முன்தினம் கொடிஹாலா கிராமத்தில் உள்ள ஒருவரின் வீட்டுக்குள் சுமார் ஐந்தரை அடி நீளமுள்ள விஷப்பாம்பு புகுந்துள்ளது. இதனால் பயந்து போன கிராம மக்கள் பசவராஜை அழைத்து வந்தனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. நிதானம் இன்றி இருந்த பசவராஜ் வழக்கம் போல் பாம்பை லாவகமாக பிடித்துள்ளார். ஆனால் பாம்பை எடுத்தவுடன் அதை காட்டுற்குள் விடுவதற்கு அவர் செல்லவில்லை.

கையை கடித்த பாம்பு
அதற்கு பதிலாக பாம்பை கையில் வைத்து வேடிக்கை பார்த்துள்ளார். அப்போது அந்த பாம்பு பசவராஜை 5 முறை கடித்துள்ளது. இதை அடுத்து பாம்பின் விஷம் அவரின் உடலில் ரத்தத்தில் கலக்க சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதற்குக் காரணம் அவர் பாம்பை மிக இறுக்கமாக பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் அவர் கையில் இருந்து எப்படியாவது விடுபட நினைத்து அவரது கையை கடித்து குதறி இருக்கலாம். பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அதெல்லாம் நடுங்காது என்பது போல் அசால்ட்டாக 300 விஷப் பாம்புகளை பிடித்த இவருக்கு அந்தப் பழமொழி பொருந்தாது என்றே சொல்லலாம். ஆனாலும் அலட்சியமாக இருந்ததால் பசவராஜ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பாம்பு கொட்டினால் என்ன செய்வது?
பாம்பு கடித்தால் உடனடியாக பாதிக்கப்பட்டவரை ஒருக்களித்து அல்லது குப்புற படுக்க வைக்க வேண்டும். பாம்பு கடிபட்டவர் பதட்டம் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கையில் கடித்திருந்தால் மோதிரம், வளையல்களையும், காலில் கடிபட்டிருந்தால் காலணிகளை அகற்ற வேண்டும். பாம்பு கடிபட்டவர் அருந்துவதற்கு எதையும் தரக்கூடாது. கடிபட்ட இடத்தை கீறவோ, வாய்வைத்து நஞ்சை உறிஞ்சி எடுக்கவோ முயற்சி செய்ய வேண்டாம். கடிபட்ட இடத்தில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யலாம். கடி இடத்துக்கு மேலே ஒரு விரல் புகும் அளவுக்கு சாதாரண அழுத்தத்தில் துணியால் கட்ட வேண்டும். கடிபட்ட 45 நிமிட நேரத்திற்குள் விரைவாக மருத்துவமனைக்கு படுக்கை நிலையில் கொண்டு செல்ல வேண்டும்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications