மணிப்பூரில் தனிப் பெரும்பான்மை பெரும் பாஜக..சறுக்கிய காங்கிரஸ்.. ஏபிபி - சி வோட்டர்ஸ் கருத்துகணிப்பு
இம்பால் : மணிப்பூரில் தற்போது ஆளும் பாரதிய ஜனதா கட்சி 23 முதல் 27 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் வகையில் வலுவான நிலையில் உள்ளதாகவும், காங்கிரஸுக்கு 12-16 சட்டமன்ற இடங்கள் கிடைக்கும் என ஏபிபி சி வோட்டர்ஸ் கருத்துகணிப்பில் கூறியுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் 60 இடங்கள் உள்ள நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டும் நடைபெற்ற தேர்தலில் பாஜக 36.2% வாக்குகளுடன் 21 இடங்களில் வெற்றி பெற்றது.
காங்கிரஸ் 35.1% வாக்குகளுடன் 28 இடங்களிலும், நாகா மக்கள் முன்னணி 7.1% வாக்குகளும், தேசிய மக்கள் கட்சி 5% வாக்குகளும் பெற்றது.

மணிப்பூர் தேர்தல்
இந்நிலையில் 60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மாநிலத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவில் 78.03 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இரண்டாவது கட்டமாக 78.03 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தின்படி, 22 தொகுதிகளில் 78.49 சதவீத வாக்குப்பதிவு சற்று அதிகமாக இருந்தது.

அதிக வாக்கு சதவீதம்
வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், மணிப்பூரில் ஒவ்வொரு கட்சியும் பெற்ற இடங்களின் எண்ணிக்கை மற்றும் வாக்கு சதவீதத்தைக் காட்டும் எக்ஸிட் போல் முடிவுகளுடன் ABP News மற்றும் CVoter கணித்துள்ளது. இதன்படி பாஜகவின் வாக்கு சதவீதம் 2017 சட்டமன்றத் தேர்தலை விட சற்று அதிகரித்து 38.7 சதவீதமாக உள்ளது.

சரியும் காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியின் வாக்குப் பங்கு சதவீதம் 28.7 சதவீதமாக உள்ளது, இது 2017ஆம் ஆண்டு முந்தைய சட்டமன்றத் தேர்தலை விட கிட்டத்தட்ட 6 சதவீதம் சரிவாகும். நாகலாந்து மக்கள் முன்னணி 11.2 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இதேபோல் தேசிய மக்கள் கட்சி 9.2 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது.

மீண்டும் பாஜக
மணிப்பூரில் தற்போது ஆளும் பாரதிய ஜனதா கட்சி 23 முதல் 27 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் வகையில் வலுவான நிலையில் உள்ளது. இந்திய தேசிய காங்கிரஸுக்கு (INC) 12-16 சட்டமன்ற இடங்கள் கிடைக்கும்.

பிற கட்சிகள் நிலவரம்
தேசிய மக்கள் கட்சி 10-14 இடங்களையும், அதே நேரத்தில் பாஜகயின் கூட்டாணி கட்சியான நாகா மக்கள் முன்னணி 3-7 இடங்களைப் பெறலாம். மற்றவர்கள் 2-6 இடங்களைப் பெறலாம்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications