மணிப்பூர்: பிரதமர் மோடி வருகைக்கு இடதுபோராளி குழுக்கள் மீண்டும் எதிர்ப்பு- முழு அடைப்புக்கு அழைப்பு!

Subscribe to Oneindia Tamil

இம்பால்: மணிப்பூர் சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு பல்வேறு இடதுசாரி போராளி குழுக்களின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் பிரதமர் மோடி நாளை வருகை தரும் போது முழு அடைப்பில் பங்கேற்க வேண்டும் என்றும் அந்த கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

60 இடங்களைக் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு வரும் 28-ந் தேதியும் மார்ச் 5-ந் தேதியும் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து வாக்குகளும் மார்ச் 10-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

கோவா மாநிலத்தைப் போலவே மணிப்பூரில் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக வளைத்துப் போட்டுள்ளது. இதனால் இம்முறையும் மணிப்பூரில் பாஜக ஆட்சி அமையவே வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஆயுத படை சட்டத்துக்கு எதிர்ப்பு

ஆயுத படை சட்டத்துக்கு எதிர்ப்பு

மணிப்பூர் சட்டசபை தேர்தலில் ஆயுத படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் விவகாரம் பிரதான இடம் பிடித்துள்ளது. நாகாலாந்தில் 14 அப்பாவி தொழிலாளர்களை ராணுவம் சுட்டுப் படுகொலை செய்தது. ஆயுத படை சிறப்பு சட்டத்தின் மூலம் ராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இதனால் வடகிழக்கு மாநிலங்களில் ஆயுத படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

பிரதமர் மோடி பிரசாரம்

பிரதமர் மோடி பிரசாரம்

இந்நிலையில் பிரதமர் மோடி நாளை சட்டசபை தேர்தலுக்காக பிரசாரம் மேற்கொள்ள மணிப்பூர் செல்கிறார். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள Luwangshangbam என்ற விளையாட்டு வளாகத்தில் பிரதமர் மோடி உரையாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு

பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு

கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது இம்பாலில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அந்த பயணத்தின் போது பல்வேறு போராளி குழுக்களின் கூட்டமைப்பு பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதேபோல் இந்த முறையும் பிரதமர் மோடியின் நாளைய பயணத்துக்கு போராளி குழுக்களின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. மேலும் பிரதமர் மோடியின் வருகையின் போது வர்த்தக நிறுவனங்கள் அனைத்தையும் மூடி முழு அடைப்பில் பங்கேற்க வேண்டும் என்றும் போராளி குழுக்களின் கூட்டமைப்பு மீண்டும் அழைப்பு விடுத்திருக்கிறது.

மணிப்பூர் போராளி குழுக்கள் கூட்டமைப்பு

மணிப்பூர் போராளி குழுக்கள் கூட்டமைப்பு

மணிப்பூரில் இயங்கி வரும் 7 இடதுசாரி போராளி குழுக்கள் இணைந்து Coordination Committee (CorCom) என்ற கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன. இதில் கங்லிபாக் கம்யூனிஸ்ட் கட்சி, கங்லே யாவோ கன்னா லுப், கங்லிபாக் மக்கள் புரட்சிகர கட்சி, மக்கள் விடுதலை ராணுவத்தின் மக்கள் புரட்சிகர முன்னணி,, ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி, கங்லிபாக் ஐக்கிய மக்கள் கட்சி ஆகியவை இணைந்து இந்த கூட்டமைப்பை 2011-ல் உருவாக்கின. இந்த கூட்டமைப்புதான் மணிப்பூரில் நாட்டின் சுதந்திர தினம், குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+