மணிப்பூரில் அசத்தல் வியூகம்: பாஜக அல்லாத கட்சிகள் ஓரணியில்! இடதுசாரிகளுடன் காங். கூட்டணி!
இம்பால்: மணிப்பூர் சட்டசபை தேர்தலில் பாஜக அல்லாத கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இணைந்துள்ளன. காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இணைந்து பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைத்துள்ளன.
60 இடங்களைக் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் மொத்தம் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து வாக்குகளும் மார்ச் 10-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
மணிப்பூர் மாநிலத்தில் பாஜக செல்வாக்கு பெறாமல் இருந்தது. கடந்த சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கூண்டோடு வளைத்துப் போட்டு மாநில கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தது. இந்த தேர்தலிலும் பாஜக வெல்லும் வாய்ப்பிருக்கிறது என்கின்றன கருத்து கணிப்புகள்.

தேர்தல் பிரச்சனை
மணிப்பூரைப் பொறுத்தவரையில் நாகாலாந்தில் 14 அப்பாவி தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரமும் அதனைத் தொடர்ந்து ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் கோரிக்கையும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆயுதப் படையினருக்கான அதிகாரம் தரும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதும் தேர்தல் கால விவாதங்களில் ஒன்றாக உள்ளது.

காங்-இடதுசாரிகள் கூட்டணி
இந்த நிலையில் மணிப்பூரில் பாஜக அல்லாத கட்சிகளின் வாக்குகளை ஒருங்கிணைக்க எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்தன. இதனைத் தொடர்ந்து தற்போது காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணி உருவாகி உள்ளது. மணிப்பூர் முற்போக்கு மதச்சார்பற்ற கூட்டணி என்ற பெயரில் இந்த புதிய அணி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, ஆர்.எஸ்.பி, ஜேடி(எஸ்), பார்வார்டு பிளாக் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

18 அம்ச பொதுசெயல் திட்டம்
இக்கூட்டணியின் சார்பில் பொதுசெயல் திட்டம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 18 அம்சங்களைக் கொண்டதாக இந்த பொதுசெயல் திட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில், மணிப்பூர் மாநிலத்தின் இறையாண்மையை எல்லைகளைப் பாதுகாப்போம்; அனைத்து தரப்பு மக்களுக்கும் நீதி வழங்குகிற ஆட்சியை வழங்குவோம். அனைத்து தரப்பு மக்களின் நம்பிக்கைகள், வழிபாடுகளையும் மதித்து நடப்போம்; மாநிலத்தில் மத நல்லிணக்கத்தை நடைமுறைப்படுத்துவோம் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

மணிப்பூருக்கு விடியல்
இது தொடர்பாக மணிப்பூர் மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: மணிப்பூர் மக்களுக்கு விடிவுகாலம் உருவாகும் தருணம். மொத்தம் 6 கட்சிகள் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளோம். மணிப்பூரில் புதிய ஆட்சியை எங்கள் கூட்டணியே அமைக்கும் என்றார். இதேபோல் சிபிஎம் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான மொய்ரங்கதம் நாராசிங் கூறுகையில், மக்கள் விரோத ஆட்சிதான் பாஜக கொடுத்தது என்றார்.
-
Annamalai: தமிழக சட்டசபை தேர்தல்.. ஒரு வழியாக பாஜகவின் "அந்த" பட்டியலில் இடம்பெற்ற அண்ணாமலை பெயர்! -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
"அண்ணாமலை சட்டசபைக்குள் வரக்கூடாது என பிளான் போட்ட முக்கிய தலைகள்”.. போட்டு உடைத்த திருச்சி சூர்யா! -
அண்ணாமலைக்கு இந்த பவர்ஃபுல் போஸ்ட்டிங் தர்றாரா மோடி.. கோவை பிடிவாதம் உடைந்ததா? லாபமா? நஷ்டமா -
மேலூரில் மீண்டும் இறங்கும் மாணிக்கம் தாகூர் மாமனார்? சீட்டை பெற போராடும் கதர்கள்.. என்ன நடக்கிறது? -
எச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவி? சென்னையில் உறுதி கொடுத்த பிரதமர் மோடி.. பாஜக மேலிடம் எடுத்த முடிவு! -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
நம்மதான் ஜெயிக்கிறோம்.. கோவையில் செந்தில் பாலாஜி மாஸ் திட்டம்.. கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை -
Sellur Raju: பாஜகவுடன்தானே? பாகிஸ்தானுடனா கூட்டணி வைத்தோம்? ஆவேசமான செல்லூர் ராஜு! -
விஜய் மனதில் பாஜக இருக்கிறது.. அடித்து சொல்லும் குஷ்பூ.. காரணம் தெரியுமா? -
தேர்தல் பரப்புரையில்.. துரந்தர், கேரளா ஸ்டோரி, காஷ்மீர் ஃபைல்ஸ் பற்றி பேசிய மோடி! கேரளாவில் சலசலப்பு -
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஒரு சோர்ந்துபோன கூட்டணி.. புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்!












Click it and Unblock the Notifications