For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மன் கி பாத்... ஆல் இந்தியா ரேடியோவில் ஒபாமா-மோடி இணைந்து உரை!

Google Oneindia Tamil News

டெல்லி : இந்தியாவும் அமெரிக்காவும் புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளதாக வானொலியில் இணைந்து உரையாற்றிய, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆகியோர் தெரிவித்தனர்.

நாட்டின் 66வது குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக மூன்று நாள் சுற்று பயணமாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வந்திருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஒபாமா, பிரதமர் மோடியுடன் இணைந்து, ‘மன் கி பாத்' என்ற வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி அகில இந்திய வானொலியில் நேற்று ஒளிபரப்பப்பட்டது.

சுமார் 35 நிமிடங்கள் ஒலிபரப்பபட்ட இந்த பதிவில் அரசியல் வெளிவிவகாரங்கள் உள்ளிட்டவைகள் குறித்து பேசாமல், தனிப்பட்ட விவகாரம் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து இருதலைவர்களும் உரையாற்றினார்.

Mann Ki Baat - Joint Radio Address by Prime Minister Narendra Modi and US President Barack Obama

இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது, " கடந்த சில மாதங்களாக நான் உங்களிடம் பேசி வருகிறேன். இன்று நம்முடன் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் இணந்துள்ளார்.

Mann Ki Baat - Joint Radio Address by Prime Minister Narendra Modi and US President Barack Obama

மார்ட்டின் லூதர் கிங் பற்றியோ அல்லது ஒபாமா பற்றியோ நாம் பேசும்போது அவர்கள் காந்தியால் ஈர்க்கபட்டதாக பேசுவதை நாம் அறிகிறோம். நான் வெள்ளை மாளிகைக்குள் நுழைவேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகியவை சமூகத்தின் பொறுப்பாக உள்ளது. இன்றைய உலகை இளைஞர்கள் ஒருங்கிணைக்க முடியம். முன்னேற்றத்திற்கு உயர்கல்வியே அவசியமானது

இவ்வாறு அவர் பேசினார்.

English summary
A special radio programme featuring US President Barack Obama and Prime Minister Narendra Modi was aired tonight, devoid of any hard issues like politics and foreign affairs but focussed on social issue and personal matters related to the two leaders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X