For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சம்பளம் கொடு! சம்பளம் கொடு!!- கேஜ்ரிவால் வீடு முன்பு டெல்லி மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி மாநகராட்சிகளின் ஊழியர்கள் தங்களுக்கான ஊதியத்தை வழங்கக் கோரி முதல்வர் கேஜ்ரிவால் வீடு முன்பாக இன்று போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு மாநகராட்சி ஊழியர்கள் தங்களுக்கான ஊதியம் வழங்கக் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த மூன்று மாநகராட்சியின் ஊழியர்களும் இணைந்து கூட்டமைப்பையும் உருவாக்கி இருந்தனர்.

MCD workers protest outside Delhi CM's residence over non-payment of salaries

இம்மூன்று மாநகராட்சிகளும் பாரதிய ஜனதா வசமே இருக்கின்றன. இவர்களுக்கு ஊதியம் வழங்குவது தொடர்பாக கடந்த மாதம் முதல்வர் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் பேச்சுவார்த்தையும் நடத்தி இருந்தனர்.

அப்போது மாநகராட்சிகளுக்கு டெல்லி மாநில அரசு அளிக்க வேண்டிய நிதி கொடுக்கப்பட்டுவிட்டது என்றும் மத்திய அரசு தம் பங்காக தர வேண்டிய ரூ600 கோடி தரப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார் கேஜ்ரிவால். இந்த நிலையில் ஊதியம் வழங்கக் கோரி மாநகராட்சிகளின் ஊழியர்கள் கேஜ்ரிவால் வீடு முன்பாக போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் முதல்வர் கேஜ்ரிவால் பேச்சுவார்த்தை நடத்துவார் என கூறப்படுகிறது.

English summary
The Municipal Corporation of Delhi (MCD) workers held a protest outside Delhi Chief Minister Arvind Kejriwal's residence over the non-payment of salaries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X