For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேஸ்புக்கால் பரபரப்பான இளம் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி “மெரின் ஜோசப்” – இங்கிதம் இல்லா பயனாளர்கள்!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் மது ஒழிப்போ இல்லை மற்ற விஷயங்களோ இப்போது ஹாட் டாபிக் கிடையாது.

கேரளா முழுவதும் வைரலாக பரவி வரும் ஒரே பெயர் "மெரின் ஜோசப்" ஐ.பி.எஸ்.

அழகாய் இருக்கும் ஒரே காரணத்திற்காக இந்த இளம் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை தாறுமாறாய் சித்தரித்துள்ளனர் சமூக வலைத்தள விஐபிகள் சிலபேர்.

அதான் வேலை வெட்டி இல்லாதவர்கள் சிலர் எப்போதும் பேஸ்புக்கே கதியென்று கிடக்கின்றார்களே அவர்கள் செய்த வேலைதான் இது.

24 வயது இளம் அதிகாரி:

24 வயது இளம் அதிகாரி:

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது பெண் மெரின் ஜோசப். இவருடைய புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

ஐ.பி.எஸ் பயிற்சி:

ஐ.பி.எஸ் பயிற்சி:

இவருடைய ஃபேஸ்புக் முகவரியின்படி சொந்த ஊர் திருவனந்தபுரம். தற்போது ஹைதராபாத்தில் ஐ.பி.எஸ் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். டெல்லியில் கல்லூரிப் படிப்பை முடித்து யுபிஎஸ்சி தேர்வில் முதல் முயற்சியில் ஐ.பி.எஸ் தேர்வானவர் மெரின் ஜோசப்.

இறக்கை கட்டிய வதந்திகள்:

இறக்கை கட்டிய வதந்திகள்:

இந்நிலையில், இவர் தற்போது கொச்சி மாநகரின் ஏ.சி.பி பதவிக்கு வந்திருக்கிறார் என்று சமூகவலை தளங்களில் வதந்திகள் இறக்கை கட்டி பறந்தது.

பயிற்சியில்தான் இருக்கின்றேன்:

பயிற்சியில்தான் இருக்கின்றேன்:

"இல்லை இல்லை. நான் டிரெயினிங்கில்தான் இருக்கிறேன். இப்படி ஏதாவது பதவியில் அமர்ந்தால், சொல்கிறேன்" என்று மறுத்திருக்கிறார் மெரின். வேகவேகமாக தன்னுடைய முகப்புத்தக பக்கத்தையும் செயலிழக்கச் செய்து விட்டார் மெரின்.

14 ஹவர்ஸ்ல 3388 லைக்ஸ்:

14 ஹவர்ஸ்ல 3388 லைக்ஸ்:

அன்று, சுமார் 14 நான்கு மணி நேரத்துக்கு முன்பாகத்தான் இவர் ஃபேஸ்புக் பக்கத்தைத் துவங்கியிருக்கிறார். அதற்குள் அவருக்கு விழுந்த லைக்ஸ் 3388!

வரம்பு மீறிய கமெண்ட்கள்:

வரம்பு மீறிய கமெண்ட்கள்:

சிலர் வரம்பு மீறி, "இப்படி ஒரு அதிகாரினா நான் டெய்லி குற்றம் செஞ்சு உங்களிடம் அடி வாங்குவேன்", "சீக்கிரம் என்னை அரெஸ்ட் செஞ்சு அடிங்க மேடம்", என்றெல்லாம் கமெண்ட் போட ஆரம்பித்து விட்டார்கள். ட்ரெயினிங்கில் இருந்ததால், சோஷியல் மீடியாக்களை மெரின் ஜோசப் கவனிக்காமல் விட்டு விட்டதால் வந்து சேர்ந்தது வினை.

குரூப் மூலமாக வினை:

குரூப் மூலமாக வினை:

"கொச்சி பழைய கொச்சியல்லா" என்ற ஃபேஸ்புக் குரூப், ‘‘Merin Joseph IPS - How many likes for our new ACP of Kochi?", "புதிதாக கொச்சிக்கு அசிஸ்டென்ட் கமிஷனராக வந்திருக்கும் மெரின் ஜோசப் ஐ.பி.எஸ் க்கு லைக் செய்யுங்கள்" என ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் ஸ்டேட்டஸ்களாகப் போட்டு லைக்ஸ் அள்ளினார்கள்.

விழித்துக் கொண்ட காவல்துறை:

விழித்துக் கொண்ட காவல்துறை:

500 பேருக்கும் மேல் அடுத்த சிலமணி நேரங்களில் இதை ஷேர் செய்ததோடு கிட்டத்தட்ட 12,000 பேர் லைக் செய்திருந்தார்கள். சிலர் ஏகத்துக்கும் உணர்ச்சி வசப்பட்டு, "இனிமேல் காவல் துறை உயர் அதிகாரிகள் பொறுப்பாய் வேலை செய்வார்கள் "என்றெல்லாம் கமென்ட் போட கேரள காவல் துறை விழித்துக்கொண்டது.

பரப்பியவருக்கு செம கவனிப்பு:

பரப்பியவருக்கு செம கவனிப்பு:

கேரள காவல்துறை, "கொச்சிக்கு அசிஸ்டென்ட் கமிஷனராக மெரின் ஜோசப் என்ற அதிகாரி நியமிக்கப்படவில்லை. அவர் படங்களை ஷேர் செய்வது தவறானது. இதை நிறுத்திக்கொள்ளுங்கள்" என்றதுடன் இணையத்தில் அந்தப் பொய்யான தகவலைப் பரப்புரை செய்த நபரை ஐ.பி அட்ரஸை வைத்துக் கண்டுபிடித்து கமிஷனர் அலுவலகத்துக்கு வரவழைத்து கடுமையாக எச்சரித்து அனுப்பினார்கள்.

வேதனை தரும் சமூக வலைதளங்கள்:

வேதனை தரும் சமூக வலைதளங்கள்:

ஆனாலும், கொஞ்சம் கூட இங்கிதமே இல்லாத நம்ம ஆட்கள் அதற்கு பின்னரும் "மேடம் உங்க புன்னகை சூப்பர்... உங்களைப் போல என் மகளையும் உருவாக்குவேன்" என்று ஆரம்பித்து, இவருடைய அழகைப் பற்றியெல்லாம் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். கூடவே விரும்பத்தகாத கமென்ட்களையும் அள்ளித் தெளித்திருப்பதுதான் வேதனை.

தயவு செய்து திருந்துங்கப்பா:

தயவு செய்து திருந்துங்கப்பா:

ஆணோ, பெண்ணோ அழகு என்பது வெளியில் தெரிவதல்ல. நடத்தையிலும், பண்பிலும் வருவது. அதைப் புரிந்து கொண்டு நாட்டின் நலனுக்காக சேவையில் ஈடுபடும் அதிகாரிகளை இனியாவது இதுபோன்ற சமூக வலைதள் வெட்டி ஆசாமிகள் தரம்குறையச் செய்யாமல் இருந்தால் நல்லது.

English summary
Merin Joseph, a young Indian Police Service (IPS) trainee from the state of Kerala in India, has become an unexpected viral sensation in the country, because of her good looks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X