தேர்தல் முடிந்த கையோடு.. வெளுத்து எடுக்கும் கனமழை.. ஸ்தம்பித்த மிசோரம்.. பரிதவிக்கும் பொதுமக்கள்
ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் இப்போது தான் தேர்தல் முடிந்துள்ள நிலையில், அங்கே கையோடு கனமழையும் வைத்துச் செய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மிசோரம் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கே ஒரே கட்டமாகக் கடந்த நவ. 7ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அங்கே மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம் என்று மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்தியாவில் ஐந்து மாநிலங்களில்- தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கு முன்பு இந்த 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது.
லோக்சபா தேர்தலுக்கு முன்பு நடைபெறும் தேர்தல் என்பதால் இதில் வெற்றி பெறவே அனைத்து அரசியல் கட்சிகளும் முயல்கின்றன. இதில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரத்திலும் தேர்தல் நடைபெறுகிறது.
மிசோரம் தேர்தல்: மிசோரத்தைப் பொறுத்தவரை அங்கே வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்த நிலையில், வரும் டிச.3ஆம் தேதி 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அங்கே இப்போது தான் தேர்தல் முடிந்த நிலையில், கையோடு மிசோரம் மாநிலத்தை மழையும் வைத்துச் செய்து வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கே கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதால் அங்கே கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மிசோரம் அரசு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
முடங்கிய பொதுமக்கள்: அங்கே தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கிய நிலையில், மிசோரம் தலைநகர் ஐஸ்வால் தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அங்கே சாலைகளில் சில வாகனங்கள் மட்டுமே காணப்பட்டன.
கனமழை காரணமாக மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், மழையால் ஏற்படும் அசம்பாவிதங்கள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. மிசோரத்தில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. மிசோரம் மாநிலத்தில் சம்பை (52 மிமீ), கோலாசிப் (58 மிமீ), லாங்ட்லாய் (52 மிமீ) மற்றும் மாமித் (56 மிமீ) கனமழை பெய்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications