மணிப்பூரை கூறுபோடும் 'கிரேட்டர் மிசோரம்' முழக்கம்- மிசோரம் தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும்?
ஐய்ஸ்வால்: மிசோரம் சட்டசபை தேர்தலானது தேசிய அரசியலில் யாருமே எதிர்பார்க்காத பல கடுமையான தாக்கங்களை உருவாக்கினாலும் ஆச்சரியப்பட முடியாது என்கின்றன கள நிலவரங்கள்.
40 சட்டசபை தொகுதிகளைக் கொண்டது மிசோரம் மாநிலம். மொத்தம் 8.52 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மிசோரம் சட்டசபைக்கான தேர்தல் நவம்பர் 7-ந் தேதி நடைபெற உள்ளது. டிசம்பர் 3-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

களத்தில் யார் யார்?: மிசோரம் சட்டசபை தேர்தலில் பிரதான போட்டி என்பது எம்.என்.எஃப் என்கிற மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ் மற்றும் ஜோரம் மக்கள் இயக்கம் - இசட்பிஎம் ஆகியவை இடையேதான். இம்மாநிலத்தில் ஒரு ஓரமாக பாஜகவும் களத்தில் நிற்கிறது.
இரு கட்சி ஆட்சிகள்: மிசோரம் யூனியன் பிரதேசமாக இருந்து பின்னர் முழுமையான மாநில அந்தஸ்து பெற்றது. மிசோரம் "மாநில" முதல் சட்டசபை தேர்தல் 1987-ல் நடைபெற்றது. அன்று முதல் இன்று வரை மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ் இரு கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சியை கைப்பற்றி வருகின்றன. தற்போதைய தேர்தலில் ஜிபிஎம் அரசாங்கத்தைத் 'தீர்மானிக்கும்' சக்தியாக உருவெடுத்திருக்கிறது.
மணிப்பூர் வன்முறை தாக்கம்: மிசோரம் சட்டசபை தேர்தலில் மணிப்பூர் இன வன்முறை மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மணிப்பூரில் மைத்தேயி இனக்குழுவினரால் படுகொலை செய்யப்பட்ட குக்கி இன மக்கள் மிசோரம் மக்களின் தொப்புள் கொடி உறவுகள். அதனாலேயே குக்கி- ஜோமி இன மக்களை மிசோரம் முழுமையாக ஆதரித்தது.
அகன்ற மிசோரம்: தற்போது மைத்தேயி இன மக்களுடன் இணைந்து வாழ முடியாது; தனி நிர்வாக கவுன்சில் தேவை என்பது குக்கி ஜோமி மக்களின் கோரிக்கை. அப்படி குக்கி மக்கள் தனி நிர்வாக கவுன்சில் பெற்றுவிட்டால் அதனை மிசோரம் மாநிலத்துடன் இணைத்து 'அகன்ற மிசோரம்' 'கிரேட்டர்' மிசோரம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை மிசோரமில் இருக்கிறது. அண்மைகாலமாக மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா இதனை வலியுறுத்தி வருகிறார். மிசோரமில் ஆளும் எம்.என்.எஃப் கட்சிக்கு இது மிகப் பெரிய ஆயுதமாக- மிசோ தேசியவாதம் கையில் இருக்கிறது. இந்த கிரேட்டர் மிசோரம் கோரிக்கையை எந்த ஒரு கட்சியாலும் எதிர்க்கவும் முடியாது. இது ஆளும் எம்.என்.எஃப்.க்கு நம்பிக்கை தரக் கூடியதாக இருக்கிறது.
எப்படியான உறவுகள்?: அதேபோல மியான்மரில் இருந்து தொப்புள் கொடி உறவுகளான சின் அகதிகளுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசை எதிர்த்து அடைக்கலம் கொடுத்து அரவணைத்தது எல்லாம் ஆளும் கட்சிக்கு அமோக சாதகம். அதாவது குக்கி ஜோமிகள், சின், மிசோ ஆகிய இனப் பிரிவுகள் அனைத்து "ஜோ" எனும் மிகப் பெரும் இனக்குழுவின் அங்கம். ஆகையால் தொப்புள் கொடி உறவுகளாக இருக்கின்றனர்.
காங்கிரஸ்: காங்கிரஸைப் பொறுத்தவரையில் ஆளும் எம்.என்.எஃப் கட்சியின் மீதான ஊழல்களை முதன்மைப்படுத்துகிறது; மதவாத பாஜகவுடனான கூட்டணியை விமர்சிக்கிறது. மிசோரம் மக்கள் மாநாடு (எம்பிசி) மற்றும் சோரம் தேசியவாதக் கட்சி (இசட்என்பி) ஆகிய உள்ளூர் கட்சிகளுடன் கரம் கோர்த்து மினி கூட்டணியை அமைத்துள்ளது காங்கிரஸ். இந்த கட்சிகள் தேர்தலில் போட்டியிடாமல் காங்கிரஸை ஆதரிக்கும்.
பாஜகவின் ரோல் என்ன?: இசட்பிஎம் கட்சியைப் பொறுத்தவரை ஆம் ஆத்மி போல பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து பேசி வருகிறது. இந்த ஆடுகளத்தில் எட்டி நின்று வேடிக்கை பார்க்கிறது பாஜக. இந்த கட்சிக்கு மிசோரமில் எந்த ஒரு ரோலுமே இல்லை. ஆனால் மறைமுகமாக ஆளும் மிசோ தேசிய முன்னணியை கட்டுப்படுத்த நினைக்கிறது பாஜக.
கருத்து கணிப்புகள் சொல்வது என்ன?: மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் தொடர்பான அண்மையா ஏபிபி கருத்து கணிப்பானது மிசோரம் மாநிலத்தில் தொங்கு சட்டசபைக்கான சாத்தியங்களை சுட்டிக்காட்டி இருக்கிறது. 40 இடங்களைக் கொண்ட மிசோரமில் 21 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்தால் ஆட்சி அமைக்க முடியும். ஏபிபி கருத்து கணிப்பில், ஆளும் மிசோ தேசிய முன்னணிக்கு 13 முதல் 17 இடங்களும் காங்கிரஸுக்கு 10 முதல் 14 இடங்களும் இசட்பிஎம் கட்சி 9 முதல் 13 இடங்களிலும் வெல்லும்; பாஜக உள்ளிட்ட இதர கட்சிகளுக்கு 1 முதல் 3 இடங்கள் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. இதனால் காங்கிரஸ் அல்லது மிசோ தேசிய முன்னணி ஆட்சி அமைக்க இசட்பிஎம் ஆதரவு தேவை என்கிற நிலை உள்ளது என்கிறது இந்த கருத்து கணிப்பு.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications