For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பணப்பரிவர்த்தனைக்கு அம்பேத்கர் பெயரில் ‘பீம் செயலி’… பிரதமர் மோடி அறிமுகம்

பணப் பரிவர்த்தனைக்காக அம்பேத்கர் பெயரில் ‘பீம் செயலி’யை பிரதமர் மோடி இன்று டெல்லியில் அறிமுகம் செய்தார்.

Google Oneindia Tamil News

டெல்லி: பணப் பரிவர்த்தனைக்காக அம்பேத்கர் பெயரில் 'பீம் செயலி'யை பிரதமர் மோடி இன்று டெல்லியில் அறிமுகம் செய்து வைத்தார். இந்தியாவின் பொருளாதாரம் குறித்து அம்பேத்கர் தெளிவான பாதையை கொண்டிருந்ததால், அவரின் பெயரில் இந்த செயலியை அறிமுகம் செய்துள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.

டிஜிட்டல் பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மின்னணு பணப் பரிவர்த்தனைக்கான புதிய செல்போன் செயலியை அறிமுகம் செய்து வைத்தார்.

Modi Launches BHIM App

பின்னார், விழாவில் மோடி பேசியதாவது:

டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை அதிகரிக்க வேண்டும். மின்னணு பரிவர்த்தனைகளை நாட்டு மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. மின்னணு பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் மக்களுக்கு பரிசு கொடுத்து கவுரப்படுத்தப்படும். அதற்காக தற்போது 'பீம் செயலி' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் பண பரிவர்த்தனைகளை மக்கள் மேற்கொள்ளலாம்.

இந்தச் செயலியில் வருங்காலத்தில் கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்படும். இதனை பயன்படுத்த தொலைபேசி இணைப்பு தேவையில்லை. உங்கள் விரல் ரேகையே அனைத்து வங்கி பரிமாற்றத்திற்கும் போதுமானது. நாட்டில் 35 சதவீதம் இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரிடமும் கைபேசி உள்ளதால் டிஜிட்டல் புரட்சி ஏற்படும்போது நாடு வரலாறு படைக்கும். இது ஏழைகளுக்கும், சிறுவணிகர்களுக்கும் மிகவும் பயனளிக்கும்.

இந்தியாவின் பொருளாதாரம் குறித்து அம்பேத்கர் தெளிவான பாதையை கொண்டிருந்தார். இதன் காரணமாகவே தலித்துகளின் நாயகனாக உள்ள அம்பேத்கரின் பெயரை இந்தச் செயலிக்கு வைத்துள்ளோம். ஒரு காலத்தில் காகிதம் மூலம் தேர்தல் நடத்தப்பட்டது. தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்துவதில் இந்தியா புரட்சி செய்துள்ளது என்று மோடி கூறினார்.

English summary
PM Modi launched a New Application, called BHIM, to make it easier to transact online today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X