மோடியின் உண்ணாவிரதப் போராட்டம் : ட்விட்டரில் கிண்டல் செய்த அரவிந்த் கெஜ்ரிவால்

Subscribe to Oneindia Tamil
  மோடியின் உண்ணாவிரத போராட்டத்தை கிண்டல் செய்த கெஜ்ரிவால்

  டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடர் முற்றிலுமாக முடக்கப்பட்டதற்கு எதிர்கட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்து நாளை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக பிரதமர் மோடி அறிவித்து இருக்கும் நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அது குறித்து ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார்.

  நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவு பெற்றது. இந்தக் கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து தொடர்ந்து எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டதால் ஒரு நாள் கூட அவை முழுமையாக நடத்தப்படவில்லை.

   Modi one day fasting Kejriwal making fun on Twitter

  இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் எழுப்பிய எந்த வித பிரச்னைகளையும் முறையாக விவாதிக்காமல் நாடாளுமன்றத்தை தொடர்ந்து ஒத்தி வைத்து, எந்த வித ஆக்கப்பூர்வ நடவடிக்கையிலும் ஈடுபடாத பாஜகவை கண்டித்து, கடந்த திங்கட்கிழமை அன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

  இந்நிலையில், இரு அவைகளையும் முற்றிலுமாக முடக்கிய எதிர்க்கட்சிகளைக் கண்டித்து பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் நாளை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

  இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மோடி இருக்கப்போவதே ஒரு நாள் உண்ணாவிரதம்... அதுவும் தன்னை எதிர்த்தே.... இது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது' என்று பதிவிட்டுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Modi one day fasting Kejriwal making fun on Twitter. PM Modi and other BJP Leaders are to observe fasting on tomorrow to condemn opposition parties uproar.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற