2 ஆண்டு சிறை- ராகுல் அப்பீல் வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு!
அகமதாபாத்: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் மே 4-ந் தேதி தொடங்கும் கோடை விடுமுறைக்குப் பின் ராகுல் காந்தி மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது கர்நாடகாவில் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். கர்நாடகாவின் கோலாரில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சனம் செய்தார்.

இதனையடுத்து ராகுல் பேச்சை முன்வைத்து அவருக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கில் கடந்த மார்ச் 23-ந் தேதி ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து மார்ச் 24-ந் தேதி ராகுல் காந்தியின் லோக்சபா எம்பி பதவி உடனடியாகப் பறிக்கப்பட்டது. அவர் வெற்றி பெற்ற வயநாடு தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது. ராகுல் காந்திக்கு எதிரான இந்த அடுத்தடுத்த நடவடிக்கைகள் காங்கிரஸ் கட்சியினரை கொந்தளிக்க வைத்தது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து நாடாளுமன்றத்தை முடக்கிப் போராட்டம் நடத்தினர்.

இதன்பின்னர் கடந்த 3-ந் தேதி குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை கோரி ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை ஏப்ரல் 13-ந் தேதி விசாரித்த சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஏப்ரல் 20-ல் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தது. ஏப்ரல் 20-ந் தேதி 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை கோரிய ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது.
இதனால் குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீது கடந்த வாரம் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையின் போது, ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்கள் தரப்படவில்லை என அவரது சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக்சிங்வி வாதிட்டார். இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று மே 2-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
குஜராத் உயர்நீதிமன்றத்தில் இன்று இவ்வழக்கில் மீண்டும் விசாரணை நடைபெற்ரது. அப்போது, ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ராகுல் காந்தி வென்ற வயநாடு தொகுதிக்கு 3 மாதங்களில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவிக்கக் கூடும். அதை ராகுல் காந்தியால் தடுத்து நிறுத்த முடியாது என்பதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரப்பட்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்த குஜராத் உயர்நீதிமன்றம், ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு மீது இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது. மே 4-ந்தேதி கோடை விடுமுறை தொடங்குகிறது. இந்த கோடை விடுமுறைக்குப் பின்னர் ராகுல் காந்தி மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தது.
-
தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம்.. புதிய தலைவர் மாணிக்கம் தாகூர்? ராகுல் காந்தி கிரீன் சிக்னல்? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications