For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரு பக்கம் 'அச்சம்'.. மறுபக்கம் 'அவசரம்'.. இரண்டுக்கும் நடுவே ரோமானியர்களின் 'போர்க்கடவுள்'!

Google Oneindia Tamil News

டெல்லி: ஆச்சரியகரமான கிரகம் செவ்வாய். பூமியைத் தாண்டி மனிதர்களால் வசிக்கக் கூடிய இடமாக இது இருக்கலாம் என்ற சந்தேகம் நாளுக்கு நாள் உறுதிப்பட்டு வருவதால், செவ்வாய் கிரகத்தைக் குறி வைத்து பல நாடுகளும் ஆய்வுகளை முடுக்கி விட்டுள்ளன.

செங்கோள் என்றும் செந்நிறக் கிரகம் என்றும் அழைக்கப்படும் மார்ஸ் எனப்படும் செவ்வாய் கிரகம் இன்று உலக விண்வெளி ஆராய்ச்சிகளில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

சூரியக் குடும்பத்தில் நான்காவது கிரகமான செவ்வாய் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ உங்களுக்காக...

இரு நிலவுகளுடன்...

இரு நிலவுகளுடன்...

பூமிக்கு ஒரு நிலவு மட்டுமே. ஆனால் செவ்வாய் கிரகத்திற்கு மொத்தம் இரண்டு நிலவுகள் உள்ளன.

ஒரு செந்தாமரையாக...

ஒரு செந்தாமரையாக...

இந்த இரு நிலவுகளுக்கு மத்தியில் செந்தாமரை போல செம்மையான நிறத்துடன் மலர்ந்து காணப்படுகிறது செவ்வாய் கிரகம்.

ஒரு பக்கம் அச்சம்...

ஒரு பக்கம் அச்சம்...

இரு நிலவுகளில் ஒன்றின் பெயர் போபோஸ் (Phobos). அதாவது இதற்கு ரோமானிய மொழியில் அச்சம் என்று அர்த்தம்.

மறுபக்கம் அவசரம்...

மறுபக்கம் அவசரம்...

இன்னொரு நிலவின் பெயர் டெய்மோஸ் (Deimos). இதற்கு அர்த்தம், அவசரம் என்பதாகும்.

2வது சின்ன கிரகம்...

2வது சின்ன கிரகம்...

சூரியக் குடும்பத்தில் மிகவும் சிறியது மெர்க்குரி எனப்படும் வெள்ளி கிரகம்தான். அடுத்த சிறிய கிரகம் செவ்வாயாகும். வரிசைப்படி பார்த்தால் இது சூரியக் குடும்பத்தில் நான்காவது கோளாகும்.

ரோமானியர்களின் போர்க்கடவுள்...

ரோமானியர்களின் போர்க்கடவுள்...

செவ்வாய் கிரகத்தை ரோமானியர்கள் தங்களது போர்க்கடவுளாக வணங்கி வழிபட்டு வருகின்றனர் என்பது சுவாரஸ்யமானது.

திருட்டு நிலவா...

திருட்டு நிலவா...

இந்த இரண்டு நிலவுகளில் போபோஸ் நிலவானது, செவ்வாய்க்குச் சொந்தமானதல்ல என்றும் ஒரு கருத்து உள்ளது. அதாவது பக்கத்தில் உள்ள காலக்ஸியைச் சேர்ந்த இந்த நிலவை செவ்வாய் தன் பக்கம் ஈர்த்து விட்டதாக கூறுகிறார்கள்.

கைக்கெட்டும் தூரத்தில்...

கைக்கெட்டும் தூரத்தில்...

நமது பூமிக்கும், நமது நிலவுக்கும் இடையிலான தூரம் மிக அதிகம். அதாவது கிட்டத்தட்ட 4 லட்சம் கிலோமீட்டர் ஆகும். ஆனால் செவ்வாய்க்கும் போபாஸ் மற்றும் டெய்மோஸ் இடையிலான தூரமானது வெறும் 5800 கிலோமீட்டர் தூரம்தானாம்.

விலகும் பூமியின் நிலவு.. நெருங்கி வரும் போபோஸ்...

விலகும் பூமியின் நிலவு.. நெருங்கி வரும் போபோஸ்...

நமது நிலவானது பூமியை விட்டு மெது மெதுவாக விலகி வருகிறது. ஆனால் அதற்கு நேர் மாறாக போபோஸ் நிலவானது, செவ்வாய் கிரகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் இது செவ்வாய் கிரகத்துடன் மோதி சிதறி விடும்.

ஏழு விண்கலங்கள்...

ஏழு விண்கலங்கள்...

தற்போது செவ்வாய் கிரகம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் ஏழே ஏழு விண்கலங்கள்தான் செயல்பாட்டில் உள்ளன. அதில் சுற்றுப் பாதையில் ஐந்தும், கிரகத்தின் உள்ளே இரண்டும் உள்ளன.

மார்ஸ் ஒடிஸ்ஸி - மங்கள்யான்...

மார்ஸ் ஒடிஸ்ஸி - மங்கள்யான்...

மார்ஸ் ஒடிஸ்ஸி, மார்ஸ் எக்ஸ்பிரஸ், மார்ஸ் ரிகனசயன்ஸ் ஆர்பிட்டர், மேவன், மங்கள்யான் ஆகியவை சுற்றுப் பாதையில் உள்ளன.

English summary
Mars has two moons, Phobos and Deimos, which are thought to be captured asteroids.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X