பெங்களூரில் அவலம்: பள்ளியில் 3 வயது சிறுமியை பலாத்காரம் செய்த அட்டென்டர்
பெங்களூர்: கிழக்கு பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் 3 வயது சிறுமி 2 முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
கிழக்கு பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுமி கடந்த மாதம் 26ம் தேதி வீட்டுக்கு சென்ற பிறகு ஒரு மாதிரியாக இருந்துள்ளார். அதில் இருந்து தொடர்ந்து 2 நாட்களுக்கு சிறுமி சோர்ந்தே காணப்பட்டார். பெற்றோர் விசாரித்தபோது பள்ளியில் வேலை செய்யும் அட்டென்டர் தன்னை ஏதோ செய்ததாகவும் தனக்கு வலிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அட்டென்டரை கடந்த 30ம் தேதி கைது செய்தனர்.
சிறுமியை அந்த அட்டென்டர் கடந்த அக்டோபர் மாதம் 22ம் தேதியும் பலாத்காரம் செய்ததாக அவரின் பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இதுவரை பெங்களூரில் 5 பள்ளி சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். சிறுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தவும், வேன்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தவும் போலீசார் உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications